என்னடா பண்ணி வச்சிருக்கீங்க எங்க ஆண்டவர?.. கல்கி 2898 ஏடியில் ஏலியனாக மாறிய கமல்ஹாசன்.. லுக் எப்படி?

சென்னை: சுப்ரீம் யஷ்கின் என 2898ம் ஆண்டில் அரசனாகவே கமல்ஹாசன் தான் உள்ளார் என ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில், நேற்று வெளியான கல்கி ஃபைனல் வார் டிரெய்லரில் கமல்ஹாசனின் முழு தோற்றமும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது.

கீர்த்தி சுரேஷை வைத்து மறைந்த நடிகை சாவித்திரியின் பயோபிக்கை இயக்கியவர் நாக் அஸ்வின். அந்தப் படத்திலேயே நடிகர்களிடம் அப்படி ஒரு நடிப்பை வாங்கி தேசிய விருதை பெற்றார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் வென்றார்.

Kamal Haasan Prabhas Kalki Amitabh Bachchan Deepika Padukone Disha Patani Nag Ashwin

இந்நிலையில், பல ஆண்டுகள் பிரபாஸை வைத்து உருவாக்கி வரும் கல்கி 2898 ஏடி படத்தில் வில்லனாக கமல்ஹாசனை நடிக்க வைத்திருக்கும் நிலையில், கமல்ஹாசனின் முழு லுக்கும் வெளியாகி ரசிகர்களை ஸ்தம்பிக்க செய்துள்ளது.

ஏலியன் போன்ற தோற்றம்: இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படத்தில் ஏலியன் கதை இடம் பெற்றிருந்த நிலையில், பிரபாஸ் நடித்துள்ள கல்கி படத்தில் கமல்ஹாசனின் தோற்றமே ஏலியன் லுக் போல இருக்கு என ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். ஹாலிவுட் படமான டூன் படத்திலும் ஒரு வில்லன் கதாபாத்திரம் வித்தியாசமான ஏலியன் போன்றே இருக்கும் என்பதால், அதே போல கமலையும் உருவாக்கி விட்டாரா நாக் அஸ்வின் என கேட்டு வருகின்றனர்.

உலக நாயகன் போடாத கெட்டப்: ஏற்கனவே வெளியான முதல் டிரைலரை பார்த்த ரசிகர்கள் அதில் இடம் பெற்ற கமல்ஹாசனின் கெட்டப்பை பார்த்துவிட்டு இந்தியன் தாத்தா லுக் போல இருக்கு என கலாய்த்தனர். ஆனால், தற்போது கால் எல்லாம் இல்லாமல் ஒரு மாதிரி வித்தியாசமான வேற்று கிரக வாசி போலவே கமல்ஹாசன் இருப்பதை பார்த்து விட்டு, இந்த உலகத்தை ஏலியன் ஆட்சி செய்கிறது என்றும் அதை தடுக்கத்தான் கல்கி அவதாரம் வரப் போகிறது என்பது போல நாக் அஸ்வின் கதையை உருவாக்கி உள்ளாரா? என கேள்விகள் கிளம்பி உள்ளன. இதுவரை உலக நாயகன் போடாத கெட்டப்பை அவருக்கு போட்டு விட்டிருக்கிறார் நாக் அஸ்வின் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

லுக் எப்படி இருக்கு?: கமல்ஹாசன் நடித்தது போலவே தெரியவில்லை என்றும் கமல்ஹாசனின் முழு தோற்றத்துடன் காட்சிகள் படத்தில் இருந்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இது வித்தியாசமான படம் என்பதால், வித்தியாசமான வில்லனாக கமல் நடித்திருப்பது சிறப்பு தான் என்றும் கருத்துக்கள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X