Don't Miss!
- News
‛ஜெயிட்டோம் மாறா’.. காஷ்மீரில் முடிந்த பாரத் ஜோடோ யாத்திரை..ராகுல் போட்ட நெகிழ்ச்சி பதிவு! என்ன?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
கமலின் புதிய படம் ட்ராப் ஆகவில்லை... இயக்குநரே சொன்ன சுவாரஸ்யத் தகவல்!
சென்னை: கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் உட்பட மொத்தம் 2 திரைப்படங்களில் கமல் நடிக்கவுள்ளார்.
கமலின் அடுத்தப் படம் ட்ராப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து தற்போது உண்மையான நிலவரம் தெரியவந்துள்ளது.
ரெட் ஜெயன்ட் தலைவர், என் அன்புத் தம்பி…: அடுக்கு மொழியில் உதயநிதிக்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்!

இந்தியன் 2வில் பிஸியான கமல்
விக்ரம் மெஹா வெற்றியைத் தொடர்ந்து 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட இந்தப் படத்தில் இந்தியன் தாத்தா கேரக்டரில் நடிக்கும் கமலின் போட்டோ வெளியாகி வைரலானது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2, அடுத்தாண்டு ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய படம் ட்ராப்?
இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கமல். நாயகன் ப்டத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்தக் கூட்டணிக்கு பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கமலின் 234வது படமாக உருவாகவுள்ள இதனை, ராஜ்கமல் பிலிம்ஸும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட்ஸும் இணைந்து தயாரிக்கிறது. முன்னதாக கமல்ஹாசன் தலைவன் இருக்கிறான் என்ற டைட்டிலில் ஒரு படத்தை எடுக்க முடிவு செய்திருந்தார். ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆகியிருந்த இந்தப் படம் தேவர் மகன் இரண்டாம் பாகம் என சொல்லப்பட்டது. இந்நிலையில், இந்தப் படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது.

இயக்குநர் விளக்கம்
கமல் - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை மகேஷ் நாராயணன் இயக்குவார் என சொல்லப்பட்டது. மலையாளத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த மாலிக், மலையான்குஞ்சு ஆகிய படங்களை இயக்கியவர் மகேஷ் நாராயணன். கமலின் விஸ்வரூபம் படத்திற்கு எடிட்டராக பணியாற்றியுள்ள இவரே, தலைவன் இருக்கிறான் படத்தை இயக்குவார் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்தப் படம் ட்ராப் ஆனது குறித்து வெளியான தகவல்களை மகேஷ் நாராயணன் மறுத்துள்ளார்.

கதை ரெடியாகிவிட்டது
கமல், மகேஷ் நாராயணன் இருவரும் இணைந்தே இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி வருகின்றனர். இந்நிலையில், கமலின் புதிய திரைப்படம் ட்ராப் ஆகவுள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ள மகேஷ் நாராயணன், இன்னும் அதுகுறித்து முடிவு செய்யப்படவில்லை. அதேபோல், இந்தப் படம் ட்ராப் ஆகவும் வழியில்லை. கதை, திரைக்கதை எழுதும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதனால், படம் நிச்சயமாக உருவாகும், விரவில் அதுகுறித்து அபிஸியல் அப்டேட்டும் வெளியாகும் என உறுதியாக கூறியுள்ளார். இன்னொரு பக்கம் கமலின் 233வது படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாகவும் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.