twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    NFT Sale, Metaverse.. விக்ரம் படத்தை வேறலெவலுக்கு கொண்டு சென்ற கமல்.. டெக்னாலஜி நாயகனாச்சே!

    |

    சென்னை: இந்திய சினிமாவில் பல வெளிநாட்டு யுக்திகளையும் புதிய புதிய தொழில்நுட்பங்களையும் கொண்டு வந்தவர் நடிகர் கமல்ஹாசன். அதன் காரணமாகவே அவரை ரசிகர்கள் உலகநாயகன் என கொண்டாட ஆரம்பித்தனர்.

    இந்நிலையில், விரைவில் வெளியாகப் போகும் தனது விக்ரம் படத்திலும் ஏகப்பட்ட டெக்னோ விளையாட்டுக்களை விளையாட ஆரம்பித்துள்ளார் நம்மவர்.

    சிங்கம், புலி, சிறுத்தை என டிரைலரில் கதை சொல்லி மிரட்டிய கமல்ஹாசன் கேன்ஸ் திரைப்பட விழாவில் செம கெத்தாக கலந்து கொண்டு விக்ரம் படத்திற்கு வேறலெவல் புரமோஷனையும் அதன் NFT Sale மற்றும் Metaverse-களையும் அறிமுகப்படுத்த உள்ளார்.

    இந்தியில் வெளியாகும் விக்ரம் படத்தின் ட்ரெயிலர் வெளியானது... என்ன டைட்டில்னு தெரியுமா? இந்தியில் வெளியாகும் விக்ரம் படத்தின் ட்ரெயிலர் வெளியானது... என்ன டைட்டில்னு தெரியுமா?

    கேன்ஸில் கமல்

    கேன்ஸில் கமல்

    ஏ.ஆர். ரஹ்மானின் VR தொழில்நுட்ப படமான Le Musk கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் புரமோட் செய்ய கெத்தாக களமிறங்கி உள்ளார். இந்தியா சார்பில் நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன், நவாசுதின் சித்திக், இயக்குநர் பா ரஞ்சித், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், நடிகைகள் தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, பூஜா ஹெக்டே மற்றும் ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

    விக்ரம் புரமோஷன்

    விக்ரம் புரமோஷன்

    சென்னையில் ரயிலில் பிரம்மாண்டமாக விக்ரம் படத்தின் புரமோஷனை ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன், தற்போது பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் படத்தை வேறலெவலில் புரமோட் செய்ய முடிவு செய்துள்ளார்.

    விக்ரம் NFT Sale

    விக்ரம் NFT Sale

    விக்ரம் படத்தை NFT Sale எனும் டிஜிட்டல் மயமாக்கும் முடிவுக்கு கமல்ஹாசன் வந்துள்ளார். இதற்கு முன் துல்கர் சல்மானின் குரூப் திரைப்படம் தான் இந்தியாவின் முதல் NFT Sale படம் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்தின் NFT Sale போஸ்டர் உடன் நடிகர் கமல் கேன்ஸ் விழாவில் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

    NFT Sale என்றால் என்ன?

    NFT Sale என்றால் என்ன?

    மோனாலிசா புகைப்படம் உலகில் பலரிடம் இருக்கும். ஆனால், அதன் உண்மையான வரைந்த ஓவியம் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது. Non Fungible Token என்பதன் சுருக்கமே NFT. விக்ரம் படத்தையும் அப்படியொரு ஒன் அண்ட் ஒன்லி டிஜிட்டல் பொக்கிஷமாக மாற்றியிருக்கிறார் கமல்ஹாசன். பிற்காலத்தில் NFT-ன் மதிப்பு பல மில்லியன் டாலர்கள் லாபத்தை கொடுக்கும் என்று கூறுகின்றனர்.

    மெட்டாவர்ஸும் இருக்கு

    மெட்டாவர்ஸும் இருக்கு

    மெட்டாவர்ஸ் எனும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்திலும் விக்ரம் படத்தை கொண்டு சேர்த்திருக்கிறார் கமல்ஹாசன். எதிர்காலத்தில் இன்டெர்நெட்டை விட மெட்டாவர்ஸின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும் என்பதால், இப்போதே மெட்டாவர்ஸ் மற்றும் என்எஃப்டி தொழில்நுட்பங்களை இந்திய சினிமா உலகுக்கு அறிமுகப்படுத்த உள்ளார் கமல்ஹாசன்.

    என்ன லாபம்

    என்ன லாபம்

    என்.எஃப்.டியில் போஸ்டர் வாங்குபவர்களுக்கு சலுகையாக மெடாவெர்ஸ் உலகத்தில் இடம், மெடாவர்ஸ் மீட்டிங், அவர்களை பிரபலப்படுத்துவது, இனி வருங்கால நிகழ்ச்சிகளுக்கு இலவச டிக்கெட் என பல சலுகைகளை தருவதாகவும் அறிவித்துள்ளனர். இதற்காக தமிழ் திரையுலகில் ( இந்திய திரையுலகிலும் இருக்கலாம்) யாரும் செய்யாத முயற்சியாக விக்ரம் மெடாவர்ஸ் உலகை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் என்.எஃப்.டி வாடிக்கையாளர்களை கமல் உள்ளிட்ட படக்குழுவினர் விர்ச்சுவல் உலகில் நேரடியாக சந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

    English summary
    Kamal Haasan makes his Vikram movie in Metaverse and NFT sale concept and promote the film at Cannes Film Festival 2022.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X