Thug Life Kamal: நான் இறங்க தயார்.. ஆனால் அதைக் கட்டாயம் செய்வேன்.. கமல்ஹாசன் மாஸ் பேச்சு!
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இருவரும் இணைந்து படத்தின் கதையை உருவாக்கியுள்ளார்கள். படத்தில் சிம்பு, அபிராமி, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் புரோமோசன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தக் லைஃப் படம் நாயகன் படத்தின் இரண்டாம் பாகமா என்ற கேள்வியை ரசிகர்கள் பலரும் முன் வைத்து வருகிறார்கள். அதே நேரத்தில் நாயகன் படத்தின் கிளைமாக்ஸில் சக்திவேல் கதாபாத்திரம் சுட்டு வீழ்த்தப் படுவதைப் போல் முடிக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் பெயர் மட்டும் சக்திவேல் என்று வைக்கப்பட்டுள்ளது. மற்றபடி அந்த கதைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று இயக்குநர் மணிரத்னம் கூறினார்.

கமல் வீடியோ: படத்தின் புரோமோசன் வேலைகளில் கமல்ஹாசன் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது, " எவரெஸ்ட் மலை ஏறிவிட்டால் அதன் உச்சியை பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது. இறங்கி விட வேண்டும். அது ஒரு சாதனை, அவ்வளவே. எவரெஸ்ட்டின் டீப் என்று சொல்லக்கூடிய இடத்தில் மிகவும் குறைந்த அளவிலான இடம் தான் இருக்கும்.
சிறந்த நடிகர்கள்: அதில் அடுத்து வரும் 100 பேருக்கு இடம் கிடையாது. இறங்கி விட வேண்டும். நான் இறங்க தயார். ஆனால் ஒரு 10 பேரையாவது கொண்டு வந்து நிறுத்தாமல் நான் இறங்க மாட்டேன். எனக்கு அடுத்து வரும் தலைமுறையில், என்னை விட நான்கு சிறந்த நடிகர்களை உங்களுக்கு அடையாளம் காட்டி விட்டுத்தான் நான் செல்வேன்" என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கன்னடப் பிரச்னை: தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசும்போது, அவர் கன்னட மொழி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் படம் வெளியாகுமா இல்லையா என்பது இப்போதுவரை கேள்விக் குறியாக உள்ளது. கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்டால் தான் படம் கர்நாடகாவில் ரிலீஸ் செய்யப்படும் என கன்னட திரைப்பட சம்மேளன தலைவர் ராஜசிம்மலு கூற, கமல்ஹாசனோ அன்பு மன்னிப்பு கேட்காது என்று அழுத்தம் திருத்தமாக பதில் சொல்லிவிட்டார். இதனால் இந்த பரபரப்பு இன்னும் அடங்காமல் உள்ளது.


Click it and Unblock the Notifications











