அமெரிக்காவில் கமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்?...போட்டோவுடன் வெளியிட்ட ஹாலிவுட் பிரபலம்

நியூயார்க் : இந்தியன் 2 படத்திற்காக தயாராவதற்காக அமெரிக்கா சென்றதாக சொல்லப்பட்ட நடிகர் கமல்ஹாசன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Kamal Haasan meets Hollywood make-up artist ahead of Indian 2 shooting

இந்நிலையில் ஹாலிவுட் நடிகை மெக்கென்சி கேட் வெஸ்ட்மோர், கமல் பற்றிய புதிய தகவலை போட்டோவை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த நடிகையை வீட்டுக்கே சென்று சந்தித்துள்ளார் கமல்ஹாசன். இந்தியன் 2 விற்குள் ஹாலிவுட் நடிகைக்கும் என்ன தொடர்பு? அவரும் இந்த படத்தில் நடிக்கிறாரா என பலரும் கேட்டு வருகின்றனர்.

Recommended Video

Vikram பட வசூல் சாதனை... கொண்டாட்ட மனநிலையில் KamalHaasan *Kollywood | Filmibeat Tamil

ஆனால் நடிகை மெக்கென்சியின் தந்தை பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் மைக்கேல் வெஸ்ட்மோர் ஆவார். இவரை பார்க்க தான் கமல் சென்றுள்ளார். இவர் கமல்ஹாசனின் பிரமாண்ட படங்களான இந்தியன், அவ்வை சண்முகி மற்றும் தசாவதாரம் போன்ற படங்களில் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றியவர். தற்போது இந்தியன் 2 படம் மீண்டும் ஆரம்பிக்க உள்ள நிலையில்,மைக்கேல் வெஸ்ட்மோர் வீட்டுக்கே சென்று அவரைச் சந்தித்துள்ளார் கமல்.

தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ள கமல், மைக்கேல் வெஸ்ட்மோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பை நடிகை மெக்கென்சி தனது வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கமல்ஹாசன் நடிக்க, ஷங்கர் இயக்கி வருகிறார்.இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக படம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து கொரோனா, படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தடைப்பட்டது. இதனால் இயக்குநர் ஷங்கர், ராம்சரணை வைத்து இயக்கும் 'ஆர்சி15' படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படம் ரிலீசாகி செம ஹிட் ஆனது.

விக்ரம் படத்தின் 75வது நாளை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் 'இந்தியன் 2' படத்தின் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறது படக்குழு. இந்த படத்திற்கு தயாராவதற்கு தான் கமல் அமெரிக்கா சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் செப்டம்பரில் துவங்கப்படும் என காஜல் அகர்வால் சமீபத்தில் அப்டேட் தந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்திலேயே துவங்கப்படும் என லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் முதல் வாரத்திலேயே கமல் இந்தியா திரும்ப உள்ளதாகவும், அதற்கு பிறகு தொடர்ச்சியாக ஒரு மாதம் இந்தியன் 2 ஷுட்டிங்கில் அவர் பங்கேற்க உள்ளதாகவும், 2023 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன் இந்தியன் 2 ஷுட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X