மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.. குணா அண்ட் தி பாய்ஸ்.. வீடியோவே வந்துடுச்சே!

சென்னை: சிதம்பரம் இயக்கத்தில் கடந்த 22ம் தேதி மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 7 நாட்களில் 50 கோடி வசூலை சாத்தியமாக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கடந்த வாரம் கோலிவுட்டில் வெளியான படங்களை விட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டியிருப்பதாகவும் இங்கேயே 10 கோடி வசூலை அந்த படம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் பல திரையரங்குகள் போட்டிப் போட்டு அந்த படத்தை ரிலீஸ் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னைக்கு வந்த மஞ்சுமெல் பாய்ஸ் டீம் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர். தற்போது அந்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மேலும், உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார் கமல்ஹாசன்.

Kamal Haasan meets Manjummel Boys team video goes trending

காலத்தால் அழியாத கமல் படங்கள்: தமிழ் சினிமா உள்ளவரை கமல் படங்கள் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும். வித்தியாசமான முயற்சிகளை மற்ற நடிகர்கள் எல்லாம் செய்யவே யோசித்து கமர்ஷியல் ஹீரோவாக மாறினால் மட்டுமே ஜீவிக்க முடியும் என நினைத்துக் கொண்டிருக்கும் காலத்தில், அப்பவே பல சோதனை முயற்சிகளை செய்து உலக நாயகனாக மாறியவர் கமல்ஹாசன்.

கடுப்பில் ரஜினி ரசிகர்கள்: குணா படத்தின் இன்ஸ்பிரேஷனாக உருவாகி உள்ள மஞ்சுமெல் பாய்ஸ் மிகப்பெரிய வசூல் வேட்டை அடைந்த நிலையில், அதை கூட பொறுக்க முடியாமல் சில ரஜினிகாந்த் ரசிகர்கள் குணா படமே ஒரு குப்பை படம் தான் என ட்ரோல் செய்து வருகின்றனர். "கண்மணி அன்போடு காதலன்" பாடல் மட்டும் தான் அந்த படத்தில் வொர்த்தான விஷயம் என பதிவிட்டுள்ளனர்.

கமலை சந்தித்த மஞ்சுமெல் பாய்ஸ்: சென்னைக்கு வந்த இயக்குநர் சிதம்பரம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த மலையாள நடிகர்கள் அனைவரும் கமல்ஹாசனை சந்தித்ததும் மகிழ்ச்சியடைந்த வீடியோவையே தற்போது டர்மெரிக் மீடியா வெளியிட்டுள்ளது.

குணா பாய்ஸ்: மஞ்சுமெல் பாய்ஸ் குணா கமலுடன் இணைந்து உரையாடிய வீடியோ வெளியான நிலையில், குணா பாய்ஸ் என அந்த வீடியோவுக்கு டைட்டில் வைத்துள்ளனர். மஞ்சுமெல் பாய்ஸ் படம் பார்த்து ரொம்பவே ஹேப்பியாகிட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என கமல்ஹாசன் அந்த டீமை பாராட்டும் காட்சிகள் ப்யூர் கூஸ்பம்ப்ஸ் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X