twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல் சந்திப்பு... என்னவா இருக்கும்?

    |

    சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சந்தித்தார்.

    உலகநாயன் கமல்ஹாசன் நடிப்பில் ஜூன் 3ந் தேதி வெளியானத் திரைப்படம் விக்ரம். இப்படத்தில், கமல், சூர்யா, விஜய்சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, மைனா நந்தினி, ஷிவானி நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    மனநலம் பாதிக்கப்பட்ட ரஜினி ரசிகர்.. ரஜினியின் உதவிக்காக 3 ஆண்டாக காத்திருக்கும் குடும்பம்! மனநலம் பாதிக்கப்பட்ட ரஜினி ரசிகர்.. ரஜினியின் உதவிக்காக 3 ஆண்டாக காத்திருக்கும் குடும்பம்!

    ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே செம ஹிட்டானது.

    விக்ரம்

    விக்ரம்

    மாநகரம், கைதி, மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் விக்ரம். தமிழ் சினிமாவில் இந்த படம் புதிய மைல் கல்லை தொட்டுள்ளது என்று சொல்லும் அளவிற்கு படம் மகத்தான சாதனை படைத்துள்ளது. விக்ரம் படத்தை அனைத்து தரப்பு மக்களும் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

    மாஸ் திரைப்படம்

    மாஸ் திரைப்படம்

    பல அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தில், கமல் கர்ணன் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய மகனை ஒரு மாஃபியா கும்பல் கொன்றுவிட, பழிவாங்க களமிறங்குகிறார் கமல். சாதாரண பழிவாங்கும் கதையைப் போல விக்ரம் படத்தின் கதையை ஆரம்பித்து, பின்னர் ஒரு லட்சிய கதையாக மாற்றி உள்ளார்.

    லோகேஷ் கனகராஜுக்கு கார் பரிசு

    லோகேஷ் கனகராஜுக்கு கார் பரிசு

    விக்ரம் படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுவது மிக நீளமாகத் தோன்றினாலும் இந்தப் படத்தின் மூலம் இளம் தலைமுறை ரசிகர்கள் கமலின் பன்முகத்தன்மையை வியந்து பார்த்துள்ளனர். படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்ததால் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் கமல். மேலும், படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்துள்ளார்.

    ரூ 300 கோடி வரை வசூல்

    ரூ 300 கோடி வரை வசூல்

    கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் படம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் அதிக அளவுக்கு விக்ரம் படம் கலெக்சனை அள்ளி உள்ளது. அதே நேரத்தில் தமிழகம் தாண்டி அண்டை மாநிலம், நாடுகள் என அனைத்து இடங்களிலும் விக்ரம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்கள் முடிவடைந்த நிலையில் உலகம் முழுவதும் விக்ரம் ரூ 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மு.க.ஸ்டாலினுடன் கமல் சந்திப்பு

    மு.க.ஸ்டாலினுடன் கமல் சந்திப்பு

    இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் விக்ரம் திரைப்படம் மகத்தான பெற்ற வெற்றியை அடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார். இந்த சந்திப்பின் போது விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார்.

    English summary
    Actor-politician Kamal Haasan met Tamil Nadu Chief Minister MK Stalin at his camp office today evening.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X