CM விஜய்யைச் சந்தித்த கமல்ஹாசன்.. உபசரிப்பில் பிரமாதப்படுத்திய தம்பி விஜய்னு பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இது தொடர்பான பதிவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய்யை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் விஜய்க்கு சில புத்தகங்களையும் நினைவுப் பரிசாக கொடுத்துள்ளார்.

Kamal Haasan Meets Vijay Praises CM Vijay s Warm Hospitality and Discusses Tamil Cinema Welfare

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம் பெற்றது. இது மட்டும் இல்லாமல் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய்யின் தவெக மொத்தம் 233 இடங்களில் முதல் முறையாக போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க, திமுக அல்லாத திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரி, ஆட்சி அமைத்தது.

தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பின்னர், மறுநாள் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதேபோல் மதிமுக தலைவர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முதலமைச்சருடன் சந்திப்பு: இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் முதலமைச்சர் விஜய்யை அவரது வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான பதிவில், “ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய்யை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

6 கோரிக்கைகள்: தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X