’என்னை செதுக்கிய 60 பேர்’ – ’உங்கள் நான்’ விழாவில் மனம் திறந்த கமல்!
Recommended Video
சென்னை: இந்திய சினிமாவில் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமையாக தனது 60 ஆண்டு கால வாழ்வை சினிமாவிற்காக அற்பணித்த ஒரு மகா நடிகனுக்கான பெருமை சேர்க்கும் மேடையாக 'உங்கள் நான்' விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.
கருப்பு நிற உடையில் விழா மேடைக்கு கம்பீரமாக வந்த கமல்ஹாசன், ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார். மேலும், தன்னை செதுக்கிய 60 ஆளுமைகள் குறித்த நீண்ட தொரு பட்டியலை வாசித்தார்.
இந்த விழாவில் இசைஞானி இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கமலை வாழ்த்தி வருகின்றனர். ரஜினிகாந்த் விரைவில் விழா மேடைக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுப்பாளர் யார்?
தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் விஜய் டிவி இணைந்து இந்த கமல் 60 நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான நீயா நானா கோபிநாத் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இசைஞானி கச்சேரி
நடிகர் கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் பெரிதளவு பங்கு கொண்டு பல சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைத்து தந்த இசைஞானி இளையராஜா கமல்ஹாசனுக்காக இன்று ஸ்பெஷல் கச்சேரி நடத்தி வருகிறார். இசைஞானியின் இசைக்கச்சேரியில் நடிகர் கமல் பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீட் காத்திருக்கிறது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உலக நாயகனின் ‘உங்கள் நான்' நிகழ்ச்சிக்கு வருகை தரவில்லை. இந்நிலையில், இளம் முன்னணி நடிகர்களான விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. அவர்களுக்கான சீட்டும் விழா மேடையில் பக்கத்து பக்கத்துல போடப்பட்டிருக்கிறது.
ரஹ்மான் ட்வீட்
நேரு உள்விளையாட்டு அரங்கிற்குள் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் நுழைந்தவுடன் பலத்த கரகோஷம் எழுந்தது. மேடையில் இசைஞானி மற்றும் கமலுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில், உடனுக்குடன் பதிவிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் ரஹ்மான்.
60 பேர்
கமல் 60 விழாவில் பேசிய உலகநாயகன் கமல் தன்னை செதுக்கிய 60 பேர் குறித்த நீண்டதொரு பட்டியலை வாசித்தார். அந்த பட்டியலில் இடம்பெற்ற முக்கிய நபர்களில், ஏ.வி. மெய்யப்பன், கே. பாலசந்தர், பாலு மகேந்திரா, சாருஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், இளையராஜா, ஷங்கர், பாரதிராஜா, சந்தான பாரதி, அனந்து, ஷேகர் கபூர், கிரேஸி மோகன், மைக்கேல் வெஸ்ட்மோர், ஷியாம் பெனேகல், சிங்கீதம் எஸ். ராவ், கே. விஸ்வநாத், ராஜலக்ஷ்மி, வாணி கணபதி, சரிகா, சாவித்ரி, கெளதமி, ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் என அந்த பட்டியல் நீண்டு கொண்டே போனது.


Click it and Unblock the Notifications











