twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே நாளில் இரண்டு அடி: சோகமே உருவாக இருக்கும் கமல் ஹாஸன்

    By Siva
    |

    சென்னை: தன் நண்பர் கிரேஸி மோகன் இறந்த சோகத்தில் உள்ளார் உலக நாயகன் கமல் ஹாஸன்.

    நடிகரும், நாடக எழுத்தாளரும், கதை-வசன கர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகன் மாரடைப்பால் இன்று பிற்பகல் 2 மணிக்கு உயிர் இழந்தார். அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே கமல் ஹாஸன் அங்கு வந்துவிட்டார்.

    கிரேஸி மோகன் உயிர் பிரிந்த பிறகு மருத்துவமனையில் இருந்து கிளம்பிய கமல் ஹாஸனின் முகத்தை பார்த்தவர்களுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே கிரிஷ் கர்னாட் காலமான செய்தி அறிந்து கவலையில் இருந்தார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது: கிரேஸி மோகன் பற்றி வைரமுத்து ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது: கிரேஸி மோகன் பற்றி வைரமுத்து

     கிரேஸி மோகன்

    கிரேஸி மோகன்

    திரையுலகில் கமல் ஹாஸன், வசனகர்த்தா கிரேஸி மோகன் கூட்டணியில் உருவான படங்கள் அனைத்துமே எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. மைக்கேல் மதனகாமராஜன், மகளிர் மட்டும், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, தெனாலி, காதலா காதலா, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். ஆகிய படங்கள் கமல், கிரேஸி மோகன் கூட்டணியில் உருவான அற்புத படைப்புகள் என்றே கூற வேண்டும்.

     சிரிப்பு வெடி

    சிரிப்பு வெடி

    கமல் ஹாஸன், கிரேஸி மோகன் சேர்ந்து அளித்த படங்களை பார்ப்பவர்களால் தொடர்ந்து சிரிக்காமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு கிரேஸி மோகன் தனது வசனத்தால் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர். தனது வசனங்களால் ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்த அறிவாளி கிரேஸி மோகன்.

    வியப்பு

    வியப்பு

    கிரேஸி மோகன் வசனம் எழுதுவதில் தனக்கென்று ஒரு பாணி வைத்திருந்தார். அவரால் மட்டும் எப்படி இப்படி யார் மனதையும் புண்புடுத்தாமல் வசனம் எழுத முடிந்தது என்று வியந்தவர்கள் பலர். காமெடி பண்ணுகிறேன் என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களை பயன்படுத்தாத மனிதர் அவர். சிரிப்பு வெடியை சரவெடியாய் வெடித்துவிட்டு தற்போது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டார்.

     கவலை

    கவலை

    மனது சரியில்லை என்றால் கிரேஸி மோகன் வசனம் எழுதிய படத்தை பார்த்தாலே போதும் சிறிது நேரத்தில் நம் கவலை மறந்து சரியாகிவிடுவோம். அவர் இல்லாவிட்டாலும் தனது படைப்புகளால் தொடர்ந்து நம் கவலைகளுக்கு அருமருந்தாய் இருப்பார் கிரேஸி மோகன். ஊர், உலகையே சிரிக்க வைத்த ஒரு புண்ணியவானுக்கு மாரடைப்பா என்பதை தான் இன்னும் நம்ப முடியவில்லை.

    English summary
    Kamal Haasan is already missing his great friend and favourite dialogue writer Crazy Mohan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X