கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில் ஒரே படத்தில்.. மனோரதங்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: பிரபல மலையாள எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், இயக்குநருமான எம்.டி. வாசுதேவன் நாயரை கௌரவிக்கும் விதமாக மனோரதங்கள் என்கிற ஆந்தாலஜி உருவாகி உள்ளது. 8 இயக்குநர் இணைந்து உருவாக்கி உள்ள இந்த ஆந்தாலஜி நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில், இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

எம் டி வாசுதேவன் நாயர் என புகழ்பெற்ற இலக்கிய மேதையின் 90 ஆண்டு கால பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் 'மனோதரங்கள்' என்ற படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 9 கதைகளும் எம் டி வாசுதேவன் நாயரால் எழுதப்பட்டது. ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட ஒன்பது கதைகள் மூலம் இந்த தொடர் மனித நடத்தையின் முரண்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.‌

Kamal Haasan Mammootty Fahadh Faasil

8 இயக்குநர்கள்.. 9 கதை: ஒல்லவும் தீரவும்: பிரியதர்ஷன் இயக்கி இயக்க, மோகன்லால் நடித்திருக்கிறார். இதுவே இந்த தொடரின் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

கடுக்கண்ணவ: இயக்குநர் ரஞ்சித்தின் இயக்கத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார்.

ஷிலாலிகிதம்: இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிஜுமேனன், சாந்தி கிருஷ்ணா, ஜாய் மேத்யூ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

Kamal Haasan Mammootty Fahadh Faasil

காட்சி: இயக்குநர் ஷியாம பிரசாத் இயக்கத்தில் பார்வதி திருவோத்து மற்றும் ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளனர்.

வில்பனா: இயக்குநர் அஸ்வதி நாயர் இயக்கத்தில் மது- ஆசிப் அலி நடித்திருக்கிறார்கள்.

ஷெர்லாக்: இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பகத் பாசில் மற்றும் ஜரீனா மொய்து நடித்திருக்கிறார்கள்.

Kamal Haasan Mammootty Fahadh Faasil

ஸ்வர்க்கம் துறக்குன்ற நேரம் : இயக்குநர் ஜெயராஜன் நாயர் இயக்கத்தில் கைலாஷ். இந்திரன்ஸ்- நெடுமுடி வேணு, என் ஜி பணிக்கர், சுரபி மற்றும் லட்சுமி நடித்துள்ளனர்.

அபயம் தீடி வேண்டும்: இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சித்திக், இஷித் யாமினி, நசீர் நடித்துள்ளனர்.

காதல்க்காட்டு: ரதீஷ் அம்பாட் இயக்கத்தில் இந்திரஜித், அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்கள்.‌

Kamal Haasan Mammootty Fahadh Faasil

ஜீ5 ஓடிடி தளத்தில்: கேரளாவின் பசுமையான பின்னணியில் மனித இயல்பின் சிக்கலான சினிமா பயணமாகும். இந்த ஆந்தாலஜி தொடர் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. மேலும் இந்தத் தொடர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. சுமார் இரண்டு நிமிடங்கள் உள்ள மனோரதங்கள் தொடரின் டிரைலர் வெளியாகி தொடரின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X