மலையாள இயக்குநருடன் இணையப் போகும் கமல்ஹாசன்.. அப்போ அந்த இந்தியன் 2, விக்ரம் 3 எப்போ?

சென்னை: நாயகன் படத்தை போலவே மலையாளத்தில் பகத் ஃபாசிலை வைத்து மாலிக் படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தான் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கப் போகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

பெரிய படங்கள் ஏதும் இப்போதைக்கு போட்டியில்லாத நிலையில், விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மிரட்டி விட்ட கமல்

மிரட்டி விட்ட கமல்

விக்ரம் படத்தின் இன்டர்வெல் காட்சி, விஜய்சேதுபதியுடன் வெறித்தனமாக சண்டை போடும் காட்சி, பீரங்கி உடன் எதிரிகளை பந்தாடும் காட்சி என வெறித்தனம் காட்டி உள்ளார் கமல்ஹாசன். என் காலில் ஏற்கனவே ராடு வச்சிட்டாங்க என கமல் சொல்லும் ஸ்லேங்கே வேறலெவல் என்கிற வார்த்தைக்கு உண்மையான அர்த்தமாக அமைந்துள்ளது.

வாழ்நாள் வெற்றி

வாழ்நாள் வெற்றி

இதுவரை இல்லாத அளவுக்கு முதன் முறையாக கமல்ஹாசனின் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது. எத்தனையோ வித்தியாசமான படங்களையும், ஆச்சர்யமூட்டும் படங்களையும் கொடுத்துள்ள கமல் சமூக அக்கறை கருத்து கொண்ட ஆக்‌ஷன் படத்தை கொடுத்து 4 ஆண்டுகள் படமே வரவில்லை என்றாலும், எப்போ வந்தாலும் நான் ராஜா என்பதை நிரூபித்து இருக்கிறார்.

மலையாள இயக்குநருடன்

மலையாள இயக்குநருடன்

விக்ரம் படத்தின் இறுதியில் விக்ரம் அடுத்த பாகத்திற்கான லீடு உள்ள நிலையில், அடுத்ததாக அந்த படம் தான் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கப் போவதை உறுதி செய்துள்ளார் கமல்ஹாசன். சமீபத்தில் கேரளாவில் புரமோஷனுக்கு சென்ற போது, முழுமையான மலையாள படத்தில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார்.

மாலிக் பட இயக்குநர்

மாலிக் பட இயக்குநர்

2007ம் ஆண்டு வெளியான ராத்திரி மழா எனும் படத்தின் முலம் மலையாள திரையுலகில் எடிட்டராக அறிமுகமானவர் தான் மகேஷ் நாராயணன். கடந்த 2017ம் ஆண்டு வெளியான டேக் ஆஃப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் பகத் ஃபாசில் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான சியூ சூன், கடந்த ஆண்டு வெளியான மாலிக் உள்ளிட்ட படங்களை இவர் இயக்கி உள்ளார்.

விஸ்வரூபம் 2 படத்தில்

விஸ்வரூபம் 2 படத்தில்

ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்று இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட மகேஷ் நாராயணன் விஸ்வரூபம் 2 படத்தின் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் தீவிரமான ரசிகரான அவர், நாயகன் படத்தை போலவே மாலிக் படத்தை உருவாக்கி இருப்பார். இந்நிலையில், வரும் ஜூலை மாதம் கமல்ஹாசனை வைத்து அவர் இயக்கப் போகும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

இந்தியன் 2

இந்தியன் 2

இந்தியன் 2 திரைப்படமும் நிச்சயம் வரும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விக்ரம் புரொமோஷனின் போது கமல் தெரிவித்து இருந்தார். ஷங்கர் மற்றும் கமல் தொடர்ந்து பிசியாக உள்ள நிலையில், இந்தியன் 2 படம் எப்போது எடுத்து முடிக்கப்பட்டு வரும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

Recommended Video

Vikram Review | Yessa ? Bussa ? | Kamal Haasan #Review
விக்ரம் 3

விக்ரம் 3

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் உடன் இணைந்து தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு சமமான மிரட்டலான ரோலில் சமந்தா நடிக்கப் போவதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. லோகேஷ் கனகராஜ் அந்த படத்தை முடித்து விட்டு கைதி 2 படம் அல்லது விக்ரம் 3 உள்ளிட்ட படங்களை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X