சூர்யா பிசி.. சட்டென கமலுக்கு கதை ரெடி பண்ண கெளதம் மேனன்.. மீண்டும் வேட்டை தொடங்குகிறது!

சென்னை: ஜோஷ்வா இமை போல் காக்க படத்தைத் தொடர்ந்து, கமல்ஹாசன் உடன் இணைந்து வேட்டையாடு விளையாடு 2 படத்தை கெளதம் மேனன் இயக்கப் போவதாக நெருங்கிய வட்டத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

2006ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்நிலையில், லாக் டவுன் முடிந்த பிறகு, மீண்டும் கமல்ஹாசன் உடன் கைகோர்க்க கெளதம் மேனன் முடிவு செய்துள்ளதாகவும் இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் வருகின்றதாம்.

ஜோதிகாவுக்கு பதில்

ஜோதிகாவுக்கு பதில்

மேலும், வேட்டையாடு விளையாடு 2 படத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்கவும் பேச்சுக்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா நடிப்பில் என்னை அறிந்தால் படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில், மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க அனுஷ்கா ரெடியாம்.

சூர்யா பிசி

சூர்யா பிசி

கடந்த மாதம் இன்னும் ஒரு பத்து நாட்களில் நடிகர் சூர்யாவுக்கு ஒரு மியூசிக்கல் லவ் சப்ஜெக்ட் சொல்லப் போவதாக கெளதம் மேனன் அறிவித்திருந்தார். ஆனால், சூரரைப் போற்று ரிலீஸ், அருவா ஷூட்டிங், வெற்றிமாறன் உடன் வாடிவாசல் என சூர்யா பிசியாக இருப்பதால், கெளதம் மேனன் - சூர்யா காம்போ மீண்டும் தள்ளிப் போயுள்ளது.

வேல்ஸ் தயாரிப்பில்

வேல்ஸ் தயாரிப்பில்

கடனில் விழுந்த கெளதம் மேனனை கரை சேர்த்து எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தை ரிலீஸ் செய்ய உதவியாக இருந்த வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகிறார். அந்த படம் ரிலீசுக்கு ரெடியாகி உள்ள நிலையில், கமல் - கெளதம் கூட்டணியில் உருவாகும் படத்தையும் வேல்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக தகவல்.

அந்த படம் தானா?

அந்த படம் தானா?

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கமல்ஹாசன் நடிக்கும் படத்தை கெளதம் மேனன் இயக்க உள்ளதாகவும், இறுதிகட்ட ஸ்க்ரிப்ட் வொர்க் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், வேட்டையாடு விளையாடு 2ம் பாகம் தானா? அல்லது புதிய படமா? என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது.

லாக் டவுன் முடிந்து

லாக் டவுன் முடிந்து

சோஷியல் டிஸ்டன்ஸை கடைபிடித்து வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது போல சித்தரித்து, அவரது அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டி, சென்னை மாநகராட்சி பின்னர் மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறி உள்ள நிலையில், லாக் டவுன் முடிந்த பிறகு கமல் - கெளதம் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X