கமல்ஹாசனுக்கும் சிவாஜிக்கும் 5 தான் வித்தியாசமா? கமல் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
சென்னை : கமல்ஹாசனின் விக்ரம் படம் இன்னும் 3 நாட்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படம் ரிலீசானாலும் கமல் தன்னுடைய ப்ரமோஷனை விட மாட்டார் போல இருக்கிறது.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்துக் கொண்டார். முன்னதாக அந்த சேனலுக்காக லோகேஷ் கனகராஜுடன் இணைந்து டிடியின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தொடர்ந்து படத்தின் பிரமோஷனுக்காக சென்னை, டெல்லி, மும்பை, கேரளா, கோலாலம்பூர் உள்ளிட்ட இடங்களிலும் பிரமோஷனில் ஈடுபட்டார்.

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பான பிரமோஷன்கள்
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ரசிகர் என்று அனைவரும் கூறுகின்றனர், ஆனால் இந்தப் படத்தை பார்த்தபின்பு தான் அவருடைய ரசிகனாக மாறிவிட்டதாக கமல் முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் பிரமோஷன் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் படங்களில் இல்லாத வகையில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கமல்
இந்நிலையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சியிலும் நடிகர் கமல் நேற்றைய தினம் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவரது பாடல்களை ஜூனியர்கள் பாட, கமல் மிகுந்த உற்சாகத்துடன் பேச்சிழந்த நிலையில் அதை கண்டு களித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள், நடுவர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.

எழுதப்படிக்க தெரியாத 5 மொழிகள்
தொகுப்பாளர் பிரியங்கா அவருக்கு தெரிந்த மொழிகள் குறித்து கேள்வி எழுப்பியபோது தனக்கு தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மற்றும் கன்னடம் எழுதப்படிக்கத் தெரியாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த மொழிகளில் தன்னால் பேச முடியும் என்றும் கவிதை கூறினால் சரியான இடத்தில் அதை பாராட்டவும் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video

3ம் வகுப்புவரை படித்த சிவாஜி
தொடர்ந்து பேசிய அவர், தனக்கு தெரிந்த தமிழ், ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு காலத்தை கழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இளையராஜா என்ன இசையில் பி.எச்டி வாங்கிவிட்டா வந்தார் என்றும் கேள்வி எழுப்பினார். நடிகர் சிவாஜி கணேசன் 3வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
5 வகுப்புகள் வித்தியாசம்
சிவாஜி கணேசன் 3வது வரை படித்ததால், 8வது படித்த கமலுக்கு மரியாதை கொடுப்பதாக அவர் அடிக்கடி தன்னிடம் கூறியதாகவும் கமல் தெரிவித்துள்ளார். அவருக்கும் கமலுக்கும் 5 வகுப்புகள் வித்தியாசம் உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வாறு பல விஷயங்களை கமல்ஹாசன் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











