Don't Miss!
- Sports
யார் சிறந்த பேட்ஸ்மேன்? சச்சினா? விராட் கோலியா? கபில்தேவ் சொன்ன பளிச் பதில்
- News
ஆஹா.. மேலிடத்தோடு தொடர்பாமே? எடப்பாடி வகுக்கும் "சைலண்ட்" வியூகம்.. அப்போ ஓபிஎஸ்.. போச்சா?
- Finance
கூகுள் $17 பில்லியன் லாபம் பார்த்திருக்கு.. பணி நீக்கத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது..!
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
கண்ணதாசனும், எம்எஸ்வி.,யும் இந்தியாவின் பொக்கிஷங்கள்... புகழ்ந்த கமல்
சென்னை : சினிமா, அரசியல் என பிஸியாக இருப்பவர் கமல். இருந்தாலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் கமல்.
கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அதே சமயம் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்திலும் நடிக்கிறார். ஆனால் லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது துவக்கப்படும் என தெரியாத நிலை உள்ளது.
தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள அன்புத் தம்பி விஜய்... கமல் பிறந்தநாள் வாழ்த்து

கண்ணதாசன், எம்எஸ்வி.,யை புகழ்ந்த கமல்
இந்நிலையில் மறைந்த கவிஞர் கண்ணதாசன் மற்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்தநாளான இன்று, அவர்களை புகழ்ந்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் கமல்.

இந்தியாவின் பொக்கிஷங்கள்
கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், இசையோடு தமிழையும் கலந்து இலவசமாய் தமிழ்க் கல்வி தந்த திரு.கண்ணதாசன், திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அய்யாக்களுக்கு ஒரே நாள் பிறந்த தினமாய் அமைந்தது இன்னொரு அற்புதப் பொருத்தம் . இருவரும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல.. இந்தியாவின் பொக்கிஷங்கள். போற்றி..போற்றி..என குறிப்பிட்டுள்ளார்.

மறக்க முடியாத பாடல்கள்
கவிஞர் கண்ணதாசன் தமிழ் சினிமாக்களில் ஏறக்குறைய 5000 பாடல்களை எழுதி உள்ளார். இதே போன்று இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கிட்டதட்ட 80 படங்களுக்கு மேல் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து காலத்தால் அழிக்க முடியாத பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர்.

லைக்குகளை அள்ளும் பதிவு
பலருக்கும் முன்னோடியாக இருந்த இவர்கள் இருவரும் இணைந்து படைத்த அர்த்தமுள்ள பாடல்களுக்கு என்று தனி ரசிகர் வட்டமே உள்ளது. கண்ணதாசன் மற்றும் எம்எஸ்வி.,யின் பிறந்தநாளில் அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், கமலின் இந்த புகழாரம் லைக்குகளை அள்ளி வருகிறது.