உங்களுக்கு நான் அறிவுரை சொல்லல கண்டிக்கிறேன்.. அபிஷேக்கை சும்மா வறுத்தெடுத்த கமல்ஹாசன்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியையே பார்த்தது கிடையாது என கமல் திரும்ப திரும்ப அழுத்தி அழுத்தி கேட்டும் தான் சொன்ன விஷயத்தில் மாறாமல் அபிஷேக் ராஜா இருந்த போது ஒவ்வொரு விஷயத்திலும் அவரை வறுத்தெடுத்து விட்டார் கமல்.

கடந்த சீசனில் கூட கமல் பாலா, அர்ச்சனா உள்ளிட்ட போட்டியாளர்களிடம் இந்த அளவுக்கு கடிந்து பேசவில்லை என்கிற வருத்தம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால், அதையெல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக யாரென்று தெரிகிறதா.. இவன் தீயென்று புரிகிறதா என மாஸ் காட்டி விட்டார் ஆண்டவர்.

உண்மை தெரிஞ்சாகணும்

உண்மை தெரிஞ்சாகணும்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ரேஞ்சுக்கு கமல் சார் அபிஷேக்கிடம் மறுபடி மறுபடி பிக் பாஸ் நிகழ்ச்சியை நீங்க பார்த்ததே இல்லையா என கேட்டு வறுத்தெடுத்து விட்டார். அபிஷேக் ராஜாவும் கடைசி வரை தன்னுடைய பேச்சை மாற்றி விடக் கூடாது என்பதில் உறுதியாக பார்த்ததே இல்லை என சத்தியம் செய்து விட்டார்.

பார்க்காமல் எப்படி

பார்க்காமல் எப்படி

பார்க்காமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் வரை போவதற்கான ஸ்ட்ராட்டஜியை எப்படி தெரிந்து கொண்டு செயல்படுவது போல பேசுறீங்க அபிஷேக் என்றதும் வார இறுதியில் நீங்க வர நிகழ்ச்சியை மட்டும் கொஞ்சம் பார்ப்பேன் என இறங்கி வர கொஞ்சம் பார்ப்பீங்களா என பிடித்துக் கொண்டார்.

புரமோ பார்த்ததுக்கே இப்படி

புரமோ பார்த்ததுக்கே இப்படி

அய்யோ வசமாக சிக்கப் போறோமான்னு நினைச்சு வீக்கெண்ட் ஷோ கூட பார்த்தது இல்லை வெறும் புரமோ மட்டுமே பார்த்தே எல்லாத்தையும் புரிந்து கொண்டேன். எனக்கு அவ்வளவு பிரைன் இருக்கு என்கிற ரேஞ்சுக்கு அபிஷேக் கடைசி வரை கதை அளந்து விட அதையெல்லாம் நம்பாதவர் போலவே நம்மவர் சிரித்து விட்டார்.

அன் திரெட்

அன் திரெட்

இந்த வீட்டில் தனக்கு திரெட்டான போட்டியாளர்கள் மற்றும் அன் திரெட் என சிலரை நினைத்து வைத்திருப்பதாக அபிஷேக் கூற யாரெல்லாம் திரெட் யாரெல்லாம் அன் திரெட் என சொல்லுங்க பார்ப்போம் என கமல் அபிஷேக்கின் வாயை புடுங்க உஷாரான அபி அமைதி காத்து மதுமிதா மற்றும் தாமரை செல்வி பெயரை சொன்னார்.

குழந்தைங்களலாம் யாருடா விட்டது

குழந்தைங்களலாம் யாருடா விட்டது

கானா பாடகி இசைவாணியை பார்த்து குழந்தைங்களலாம் யாருடா ஷோவுக்குள்ள விட்டது என ஏன் கேட்டீங்க என சாட்டையை சுழற்ற பம்மிய அபிஷேக் ராஜு அப்படியெல்லாமா பேசினோம் என நினைத்து வேறு வேறு கதைகளை உஷாராக உளர கமல் மீண்டும் அதே கேள்வியை கேட்டு காலி செய்து விட்டார்.

ரசிகர்களுக்கு வருத்தம்

ரசிகர்களுக்கு வருத்தம்

அபிஷேக் ராஜாவின் அட்ராசிட்டியை தாங்க முடியவில்லை என்றாலும் இந்த வாரத்திலேயே அவர் வெளியேறுவார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. சின்னப் பொண்ணு, தாமரை செல்வி, இசை வாணி, அபிநய் போன்ற போட்டியாளர்கள் இன்னமும் உள்ளே இருக்க அபிஷேக்கை வெளியேற்றியது வருத்தம் அளிப்பதாக அபிஷேக் வெளியான தகவல் லீக்கான நிலையில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சோகம் அடைந்துள்ளனர். இனி மீம் கிரியேட்டர்கள் பிரியங்காவை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகி விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X