தோள் கொடுத்தவர்.. முதுகில் குத்தியவர்.. மீண்டும் போட்டியாளர்களுக்கு ஞாபகப்படுத்த கமல் ஆடிய கேம்!

சென்னை: அக்‌ஷரா மற்றும் சிபி சண்டையை மறந்து விட்டு இவ்வளவு இயல்பாக பழகுறாங்களே என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க மறுபடியும் தோள் கொடுத்தவர் மற்றும் முதுகில் குத்தியவர் யார் என்பதை சொல்ல வேண்டும் எனக் கூறிய கமல் ஆடிய கேம் வேறலெவல்.

எரிகிற கொல்லியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய்யை ஊற்றும் வேலையை இந்த சீசனில் கொஞ்சம் சிறப்பாகவே செய்து வருகிறார் கமல்.

இந்த வாரம் மட்டுமின்றி 6 வாரமும் உங்களுக்கு அப்படி தோன்றியவர்கள் யார் யார் என இருவரை சொல்லுங்கள் என கொளுத்திப் போட்டு விட்டார் கமல்.

நினைவூட்டிய கமல்

நினைவூட்டிய கமல்

ராஜு, அக்‌ஷரா, இசைவாணி, நிரூப், வருண் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டத்தையும் முதுகில் குத்தியவர்கள் யார் என்பதையும் அவர்களே மறந்து இருந்தாலும் அதனை மீண்டும் நினைவு படுத்தி அடுத்த வாரத்திற்கான கன்டென்ட்டிற்கு போட்டியாளர்களை தயார் படுத்தி விட்டு சென்று விட்டார் கமல்.

வருணுக்கு யார்

வருணுக்கு யார்

வருண் முதல் நபராக எழுந்து ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே தனக்கு தோள் கொடுத்தவர் அக்‌ஷரா தான் என்றும் தன்னை முதுகில் குத்தியவர் நிரூப் தான் என்றும் கமலிடம் கூறினார். தான் விளையாட்டில் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதில் நிரூப் மிகவும் கவனமாக செயல்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

வழியும் பிரியங்கா

வழியும் பிரியங்கா

தான் யாருக்கும் ஜால்ரா இல்லை என சொல்லி விட்டு நிரூப்பிடம் மட்டும் அப்படி வழிகிறாரே பிரியங்கா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தோள் கொடுத்தவரும் நிரூப் தானாம்.. முதுகில் குத்தியவரும் நிரூப் தானாம்.. இந்த கேமில் கடைசி வரை நிரூப் தனக்கு உதவ வேண்டும் என ரொம்பவே எதிர்பார்த்து பிளான் போட்டு விளையாடி வருகிறார் பிரியங்கா என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

நிரூப் அபிநய் பிரச்சனை

நிரூப் அபிநய் பிரச்சனை

நிரூப் எழுந்து பேசும் போது பிரியங்காவின் வலையில் நல்லாவே விழுந்து விட்டார் என்று தெரிந்தது. தோள் கொடுத்த ஐக்கியை விட்டு விட்டு பிரியங்காவின் பெயரை சொன்ன நிரூப் முதுகில் குத்தியது அபிநய் தான் என சொல்லி ஒரு சின்ன சண்டையே போட்டுவிட்டார். வருணுக்கு கொடுத்ததற்கு பதிலாக சகுனி பட்டத்தை அபிநய்க்கு கொடுத்திருக்கணும் என்று கூற அபிநய் நிரூப் மீது கோபப்பட்டார்.

யாரும் இல்லை

யாரும் இல்லை

மதுமிதா தனக்கு தோள் கொடுத்தவர் நிரூப் தான் என்றும் முதுகில் யாரும் குத்தவில்லை என அவரது கொஞ்சும் தமிழில் பேசி அழகாக முடித்து விட்டார். இந்த வாரம் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அபிநயின் எதிரி

அபிநயின் எதிரி

இந்த வாரமும் எவிக்‌ஷனில் இருந்து அழகாக எஸ்கேப் ஆன அபிநய் தனக்கு தோள் கொடுத்தவர்கள் பிரியங்கா மற்றும் இசை எனக் கூறினார். மேலும், முதுகில் குத்தியது என்று பார்த்தால் அது நிரூப் மட்டும் தான் என்று அபிநயும் பதிலுக்கு பழி வாங்கி விட்டார்.

நானே தான்

நானே தான்

ராஜு மற்றும் பிரியங்கா தனக்கு தோள் கொடுத்தார்கள் என்றுக் கூறிய சிபி முதுகில் குத்தியவர் என யாருமே இல்லை. எனக்கு நானே முதுகில் குத்திக் கொள்கிறேன் என ரோடு போட அதற்கு பின் பேசிய பலரும் சிபியின் வழியையே காப்பி அடிப்பதாக கமலே கலாய்த்து விட்டார்.

சேஃப் கேம் ஆடிய ராஜு

சேஃப் கேம் ஆடிய ராஜு

இருபுறமும் தனக்கு இரு கரங்களாக இமான் அண்ணாச்சி மற்றும் சிபி இருக்கிறார்கள் என தனது கேங்கை தெளிவாக அம்பலப்படுத்திய ராஜு ஜெயமோகன் முதுகில் குத்தியவர் என மற்றவர்கள் பெயரை சொன்னால் வீண் பிரச்சனை வரும் என நினைத்து சேஃப் ஆக அண்ணாச்சியின் பெயரையே சொல்லி எஸ்கேப் ஆகி விட்டார்.

பிரியங்கா முதுகில் குத்த போறாங்க

பிரியங்கா முதுகில் குத்த போறாங்க

ஆனால், இமான் அண்ணாச்சி பேசும் போது தனக்கு தோள் கொடுத்தவர் ராஜு என சொல்லாமல், தினமும் இரவு தன்னுடன் அமர்ந்து கேம் பற்றி பேசி எப்படி விளையாட வேண்டும் என்கிற அறிவுரையை வழங்குவது நிரூப் தான் என்றும் பிரியங்கா தன்னை முதுகில் இனிமேல் குத்துவார் என நினைக்கிறேன் எனக் கூறி விட்டார்.

காப்பி பேஸ்ட்

காப்பி பேஸ்ட்

ஐக்கி பெர்ரி மற்றும் இசைவாணி அப்படியே சிபி சொன்னதை பின் பற்றி முதுகில் குத்தியது யாருமில்லை என சொல்லி விட்டனர். இடை மறித்த கமல் அந்த இருவரையும் தான் பலமாக கலாய்த்தார். ஐக்கிக்கு இமான், தாமரை ஆதரவு என்றும் இசைக்கு பிரியங்கா மற்றும் பாவனி ஆதரவு என்றும் கூறினர்.

மீண்டும் காயின் மேட்டர்

மீண்டும் காயின் மேட்டர்

தாமரை செல்வி தனக்கு கேம் ஆடத் தெரியாது என்று சொல்லிக் கொண்டே சரியான நேரத்தில் கமல் முன்பாகவே மீண்டும் பாவனி தான் தனது முதுகில் குத்தினார் என்று கூறி அந்த காயின் மேட்டரை அழகாக எடுத்து வைத்து அடுத்த வாரம் பாவனிக்கு ஒரு பாயாசத்தை போட முடிவு செய்து விட்டார்.

சண்டையை இழுத்த அக்‌ஷரா

சண்டையை இழுத்த அக்‌ஷரா

சிபி அக்‌ஷராவின் பெயரை இழுக்காத நிலையில், அக்‌ஷரா சிபியின் பெயரை இழுத்து விட்டு பேச இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. தமிழில் சிபி திட்டியதும் தப்பு ஆங்கிலத்தில் அக்‌ஷரா திட்டியதும் தப்பு என கமல் பீப் மேட்டரை இன்றும் பெரிது படுத்தாமல் பேசி முடித்து விட்டார்.

முதுகில் யாருமே குத்தல

முதுகில் யாருமே குத்தல

மதுமிதா தனக்கு தோள் கொடுத்தவர் என்றும் யாருமே தனது முதுகில் குத்தவில்லை என்றும் செம க்யூட்டாக பேசி விட்டார் பாவனி. இதெல்லாம் வரும் நாமினேஷனில் நிச்சயம் கமல் ஞாபகப்படுத்திய இந்த கேம் பெரிய பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X