கட்டிப்பிடிக்கிறது தப்பா... அதைக் கத்துக்கொடுத்ததே உலக நாயகன்தான்... வெளுத்து வாங்கிய பிரியங்கா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கட்டிப்பிடிப்பது தவறில்லை, அதைக் கற்றுக்கொடுத்தது உலக நாயகன்தான் என்றுக் கூறி வெளுத்து வாங்கினார்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக ஊரு விட்டு ஊரு வந்து டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கிராமத்தினர் நகரத்தினர் என இரண்டு பிரிவுகளாக உள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய எபிசோடின் ஒரு செக்மெண்டில் பிக்பாஸ் வீடு விவாத மேடையாக மாற்றப்பட்டது. தொடர்ந்து பட்டணமா பட்டிக்காடா என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது.

கட்டிப்பிடிக்கும் பழக்கம்

கட்டிப்பிடிக்கும் பழக்கம்

இதில் இரு அணியினரும் எதிர் அணியினர் குறித்து பேச வேண்டும். இதில் கிராமத்து அணியினரும் நகரத்து அணியினரும் மாறி மாறி குற்றம்சாட்டினர். அப்போது பேசிய ஐக்கி பெர்ரி கட்டிப்பிடிக்கும் பழக்கும் குறித்து பேசினார்.

பார்ப்பவர்களுக்கு எப்படி தெரியும்

பார்ப்பவர்களுக்கு எப்படி தெரியும்

எடுத்துக்காட்டாக பிரியங்காவை குறிப்பிட்டு பேசிய ஐக்கி பெர்ரி தவறாக சொல்லவில்லை, ஆனால் ஆண் போட்டியாளர்களை கட்டிப்பிடிக்கும் போது அது பார்ப்பவர்களுக்கு எப்படி தெரியும் , குழந்தைகளும் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படி கட்டிப்பிடிப்பது சரியல்ல என்பதை பட்டும் படாமல் பேசினார்.

நேருக்கு நேராக கட்டிப்பிடிப்பேன்

நேருக்கு நேராக கட்டிப்பிடிப்பேன்

இதற்கு பதில் அளித்த பிரியங்கா, தான் சிறு வயதில் இருந்தே இப்படிதான் எல்லோரையும் நேருக்கு நேராக கட்டிப்பிடிப்பேன். யாராவது பிரச்சனையில் இருக்கும் போது அவர்களை கட்டிப்பிடித்தால் அது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். கட்டிப்பிடி வைத்தியத்தை கற்றுக் கொடுத்ததே உலக நாயகன் தான்.

எல்லோரையும் கட்டிப்பிடிப்பேன்

எல்லோரையும் கட்டிப்பிடிப்பேன்

இந்த வீட்டில் சிபியை கட்டிப்பிடித்துள்ளேன். நிரூப்பை கட்டிப்பிடித்துள்ளேன். அண்ணாச்சியின் தொப்பையை கட்டிப்பிடித்துள்ளேன், ராஜுவையும் கட்டிப்பிடித்துள்ளேன். இனியும் யாராவது பிரச்சனையில் இருந்தால் கட்டிப்பிடிப்பேன். ஆனால் இதை தவறு என்று கூறிய ஐக்கி பெர்ரியை கட்டிப்பிடிக்க மாட்டேன் என்றார்.

அப்புறம் ஏன்யா எங்கள திட்டுனீங்க?

அப்புறம் ஏன்யா எங்கள திட்டுனீங்க?

கட்டிப்பிடிப்பது சரிதான் என்று பேசிய பிரியங்காவுக்கு சமூக வலைதளங்களில் சில நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்தனர். சில நெட்டிசன்கள் பிரியங்காவை விமர்சித்தனர். சமூக வலைதளங்களில் எழுந்த ஆதரவை பார்த்த இந்த நெட்டிசன், பண்றது தப்பில்லைன்னு பிரியங்கா சொன்னதுக்கு பாராட்டுறீங்களே. அப்புறம் ஏன்யா எங்கள திட்டுனீங்க? இப்படிக்கு சினேகன், வேல்முருகன் ஆர்மி என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X