யாருக்குமே பயப்படமாட்டார்.. நாக்கை கடிச்சிட்டு வந்து நிப்பாரு.. விஜயகாந்துக்கு கமல் புகழஞ்சலி!

சென்னை: கடந்த டிசம்பர் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பல லட்சம் மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இசைஞானி இளையராஜா, கவுண்டமணி, குஷ்பு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சங்கம் சார்பாக விஜயகாந்துக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெறும் என ஒரு வாரம் கழித்து சென்னை திரும்பிய விஷால் கேப்டன் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கூறியிருந்தார். இந்நிலையில், ஜனவரி 19ம் தேதி காமராஜர் அரங்கில் சினிமா பிரபலங்கள் மற்றும் விஜயகாந்தின் மகன்கள் சூழ நடைபெற்ற நினைவேந்தல் விழாவில் கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்று பேசியுள்ளனர்.

Kamal Haasan open speech at Vijayakanth Ninaiventhal

விஜயகாந்துக்கு நினைவேந்தல் கூட்டம்: எப்போதுமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மறைவின் போது அவர்களுக்கான இறுதிச்சடங்கு முதல் நினைவேந்தல் கூட்டம் வரை அனைத்தையும் முதல் ஆளாக முன் நின்று நடத்துபவர் விஜயகாந்த் தான். ஆனால், இன்று அவருக்கே நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என நினைக்கவே இல்லை என விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் உருக்கமாக பேசியுள்ளனர். நாசர், ராதா ரவி உள்ளிட்ட மூத்த நடிகர்களும் விஜயகாந்த் பற்றியும் அவர் சினிமாவுக்கு செய்த தொண்டு பற்றியும் அஞ்சலி செலுத்திய பின்னர் பேசினர்.

கமல் புகழஞ்சலி: இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் விஜயகாந்த் யாருக்கும் பயப்பட மாட்டார். அவரது நேர்மையான கோபம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். யாராவது தப்பு செஞ்சா இறங்கி வந்து தைரியமா கேள்வி கேட்பார். இன்னைக்கும் கிராமத்து ஆள் மாதிரி கோவம் வந்துடுச்சுன்னா கேட்ருவாரு.. அது எந்த அரங்கமா இருந்தாலும் பயப்படவே மாட்டார். அந்த துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்துக்கே உதவியாய் இருந்திருக்கு என கமல் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

Kamal Haasan open speech at Vijayakanth Ninaiventhal

சத்ரியனுக்கு சாவே இல்லை: நடிகர் ஜெயம் ரவி பேசும் போது "சத்ரியனுக்கு சாவே இல்லை" என ஒரே வார்த்தையில் பேசி விஜயகாந்துக்கு புகழஞ்சலி செலுத்தினார். தேவயாணி, யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலர் விஜயகாந்த் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X