ரஜினியோடு நட்பா இருக்க முக்கிய காரணமே இதுதான் - கமல் என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு தூண் என்றால் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றொரு தூண் என்று கூறலாம். கமல்ஹாசன் சிறுவயதிலிருந்தே படத்தில் நடித்து வந்தாலும் அவருக்கு பின் தமிழ் சினிமாவில் அறிமுகமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இன்று வரை நல்ல நட்புடனே பழகி வருகிறார்.
கமல் பேட்டி
இவர்களது நட்பு குறித்து இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து படங்களில் நடித்தது குறித்து தெரிந்து கொள்ள தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் அவர்களது ரசிகர்களும் ஆவலாகவே உள்ளனர். உலக நாயகன் கமல்ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் ரஜினிகாந்தை தான் எப்போது சந்தித்தேன் என்பதை தெரிவித்து இருந்தார். அந்த வீடியோ இன்றைக்கு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

உயிருக்கு உயிரான நண்பன்
அதில், எனக்கு கோவிந்த் ராஜன் என்ற மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். அவர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். எனது குடும்பத்தில் ஒருவராக இருந்த கோவிந்தராஜனை நாங்கள் கோவிந்தஹாசன் என்று அழைப்போம். கோவிந்த் ஹாசன் எனக்கு அண்ணனை போன்றவர். ஒரு நாள் படப்பிடிப்பில் இருந்த போது அவருக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார்கள். என்ன என்று விசாரிக்கையில் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக தெரியவந்தது. மேலும் அந்த புற்றுநோயை குணப்படுத்துவது கடினம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் கூறினார்கள். அதுவரை எனது வாழ்க்கையில் மரணம் குறித்து நான் எதுவும் புரிந்து வைத்திருக்கவில்லை. கோவிந்தகாசனுக்கு புற்றுநோய் பாதிப்பு வந்தது என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அந்த நேரத்தில் நான் இயக்குனர் கே பாலச்சந்தரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன் அந்தப் படத்தில் சிவாஜி ராவ் அதாவது ரஜினிகாந்த் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நான் பார்த்ததும் அவருக்கு தொடர்ந்து வணக்கங்கள் சொல்லிக் கொண்டே இருந்தேன்.
ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் ஒரு நாள் எடுக்கப்பட்டது. அதே நாளில் உடல்நிலை சரியில்லாத எனது நண்பரும் அண்ணனும் ஆன கோவிந்த் ஹாசன் படப்பிடிப்பு தளத்திற்கு வருவதாக ஆசைப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் பிடியில் இருக்கும் அவரது ஆசையை என்னால் தட்டிக் கழிக்க முடியவில்லை. நான் அவரை வரச் சொன்னேன்.

கமல் - ரஜினி நட்பு
அப்போது கோவிந்த் ஹாசன் பிரெஞ்சு தாடி வைத்திருந்தார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பின்னர் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அதன் பின்னர் எனது மேக்அப் மேனை ரஜினிகாந்திற்கும் அதே போல் பிரெஞ்சு தாடி இருக்குமாறு மேக்கப் செய்து விட்டார். அந்தப் படத்தில் ரஜினிகாந்த் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். எனது நண்பர் கோவிந்த் ஹாசன் எனக்கு அந்தப் பையனை (ரஜினியை) பிடித்து இருக்கிறது அவன் நடிக்கும் கதாபாத்திரம் என்ன என்று என்னிடம் கேட்டார். என்னால் அவரிடம் எதுவும் சொல்ல முடியவில்லை.எனது நண்பன் கோவிந்த் ஹாசன் மீது இருந்த அனைத்து பாசமும் அப்படியே ரஜினி மீது மாறியது. அன்றிலிருந்து நானும் ரஜினியும் நண்பர்களாக இருக்கிறோம்” இவ்வாறு கமல் ஹாசன் அந்த பேட்டியில் கூறியிருப்பார். இந்த வீடியோ இன்றைக்கு இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Click it and Unblock the Notifications











