Don't Miss!
- News
டெங்குவா? கொரோனாவா? குழம்பும் கோவை.. சிக்கன்குனியாவை தடுக்க புதுச்சேரி அரசின் சூப்பர் திட்டம்..!
- Finance
ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!
- Travel
மாலத்தீவுகளுக்கு சற்றும் குறைவில்லாத இந்த இந்திய நகரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Technology
Jio பயனர்களுக்கு இனி Netflix இலவசம்: ஆக்டிவேட் செய்வது எப்படி?
- Automobiles
பெட்ரோல், டீசல் வண்டிகளை பயன்படுத்த விரைவில் தடை... கால் டாக்சி ஓட்டுபவர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்தியன் 2 என்ன ஆச்சு? விக்ரம் பிரஸ் மீட் விழாவில் மனம் திறந்து பேசிய கமல்ஹாசன்!
சென்னை: விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக ஏகப்பட்ட பிளான்களை போட்டு படு பிசியாக வேலைகளை ஆரம்பித்துள்ளார் கமல்ஹாசன்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் படத்தின் டிரைலரை வெளியிட்ட கமல்ஹாசனுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருந்தது.
இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கமல் இந்தியன் 2 படம் நிச்சயம் வரும் எனக் கூறியிருப்பது கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
கமலை
பார்த்து
தான்,
சினிமாவை
கற்றுக்கொண்டேன்..
மேடையில்
நெகிழ்ந்த
லோகேஷ்
கனகராஜ்
!

யுஏ சான்றிதழ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் சுமார் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் என்பதால், விக்ரம் படம் சற்று பெரிய படமாகவே இருக்கப் போவது உறுதி.

விக்ரம் 3
1986ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் தொடர்ச்சியாகவே இந்த விக்ரம் படம் இரண்டாம் பாகம் போல உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும், விரைவில் விக்ரம் படத்தின் 3ம் பாகமும் வெளியாகும் என்கிற அப்டேட்டை கமல்ஹாசனே நேற்று நடந்த விழாவில் அறிவித்து இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்தியன் 2 வரும்
விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் 60 சதவீத படப்பிடிப்புகள் நடைபெற்ற நிலையில், சில பல பிரச்சனைகள் காரணமாக அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியன் 2 இனிமே வராது என தகவல்கள் வெளியான நிலையில், பிரஸ் மீட்டில் இதுகுறித்து கமலிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருக்கிறது, இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனக் கூறியுள்ளார்.

லைகா ஆர்வம்
டான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் லைகா நிறுவனம் ஷங்கர் - கமல் கூட்டணியில் பல கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வந்த இந்தியன் 2 படத்தை எப்படியாவது முடித்து ரிலீஸ் செய்யவேண்டும் என்கிற ஆர்வத்தில் இருக்கிறது.

ஷங்கர் வருவாரா
இந்தியன் 2 படம் நிறுத்தப்பட்டதால் அப்செட்டான இயக்குநர் ஷங்கர் டோலிவுட்டில் ராம்சரண் படத்தை இயக்கி வருகிறார். அதற்கு அடுத்து பாலிவுட்டில் ரன்வீர் சிங் படத்தை இயக்க உள்ளார். பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்தால், ராம்சரண் படத்தை முடித்து விட்டு இந்தியன் 2 படத்தையும் ரன்வீர் சிங் படத்தையும் ஒரே நேரத்தில் ஆரம்பிப்பாரா? இல்லை என்ன செய்யப் போகிறார் என்கிற ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.