எனக்கே பயம் தான்.. சிம்பு சொன்னதும் தக் லைஃப் பதில் கொடுத்த கமல்ஹாசன்.. என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: தக் லைஃப் படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் இன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் வெளியானது. இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து மேடையேறி பேசிய ஒவ்வொரு பிரபலமும் ஹெட்மாஸ்டர் மற்றும் பிடி வாத்தியாரிடம் மாட்டிக் கொண்ட பள்ளிக் குழந்தைகள் போலவே கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் முன்னிலையில் நடிப்பதே பயமாக இருந்தது என்றனர்.

மலையாளத்தில் பணி படத்தை இயக்கி ஆள் பார்க்கவே டெரராக இருக்கும் ஜோஜு ஜார்ஜ் கூட நானும் பயந்து நடுங்கினேன் என பேச, கடைசியாக கமல்ஹாசன் மைக்கை எடுத்து உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பயம் தான் என உண்மையை உடைத்துப் பேச அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்துவிட்டது.
எனக்கும் பயம் தான்: வீரம்னா என்னான்னு தெரியுமா? பயப்படாதது போல இருப்பது என்கிற வசனத்தைக் குறிப்பிட்டே கமல்ஹாசன் அப்படி பேசியதும் சிம்பு, மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் எல்லாம் கைதட்ட அரங்கமும் அதிர்ந்தது. எனக்கு மட்டுமல்ல ஷாட் எடுக்கும் போது மணிரத்னம் ஏன் நின்னுக்கிட்டே இருப்பாரு தெரியுமா அவருக்கும் அந்த பயம் இருக்கு. நல்லா வரணும் என்கிற பயம். கடைசி வரை ரஹ்மான் கரெக்ஷன் போட்டுக் கொண்டே இருப்பது ஏன் தெரியுமா? எப்படியாவது நல்ல பாடலை நல்ல இசையுடன் ரசிகர்களுக்கு வழங்கிவிட வேண்டும் என்கிற பயம் தான். நீங்கள் எல்லாம் வெளிப்படையாக சொல்லிட்டீங்க. ஆனால், நாங்க வெளியே காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள் வைத்திருக்கிறோம் என கமல்ஹாசன் தனக்கே உரிய பாணியில் தக் லைஃப்பாக பேசியுள்ளார்.
இணைப்பு மொழி: இந்தியாவின் இணைப்பு மொழி ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்றும் இந்த பாடலில் 'ஜிங்குச்சா' என்கிற வார்த்தையை எழுதவே சீனாவில் கூட சென்று சேரட்டுமே என்பதற்காகத்தான். இதுதான் எங்களுடைய மும்மொழி கொள்கை என கிடைத்த கேப்பில் இந்தி திணிப்புக்கு எதிராகவும் சில அரசியல் பேசியிருந்தார் கமல்ஹாசன்.

டி. ராஜேந்தர் சட்டையை நனைத்துவிடுவார்: சிம்புவை பற்றி பேசுவதற்கு முன்பாக அவருடைய தந்தை டி. ராஜேந்தரை புகழ்ந்து பேசியிருந்தார் கமல்ஹாசன். நானும் ரஜினிகாந்தும் யாருடா இவன் வந்து ஒரு வருஷம் தான் ஆகுது அதற்குள் இப்படியொரு போஸ்டர் என சிம்புவின் அப்பாவை பார்த்து பேசியிருக்கிறோம். ஆனால், அந்த மனுஷனின் பாசத்தை சொல்லி அடங்காது. எனக்கு ஏதாவது ஒன்று என்றால் வந்து நெஞ்சில் சாய்ந்து அழுது என் சட்டையையே நனைத்து விடுவார். தந்தை 8 அடி என்றால் மகன் பாசத்தில் 16 அடி இப்படியொரு வசனம் இந்த படத்திலும் இருக்கு என தக் லைஃப் படத்தின் வசனத்தையும் ரிவீல் செய்துவிட்டு மணிரத்னம் என்னை முறைக்க ஆரம்பித்துவிட்டார் என்றும் பேசினார்.
நீண்ட கால தாமதம்: நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணி மீண்டும் ஏன் அமையவில்லை என்கிற கேள்விக்கு, இருவரும் கதைகளை பேசிக் கொண்டே இருப்போம். அதன் பின்னர், நான் தனியாக எடுப்பேன். அவர் தனியாக எடுப்பார். இப்போது தான் மீண்டும் எங்களை மக்களாகிய நீங்கள் ஒன்று சேர்க்க இணைந்துள்ளோம் என்றார்.


Click it and Unblock the Notifications











