twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்

    By Siva
    |

    Recommended Video

    பிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன- வீடியோ

    சென்னை: ட்விட்டரில் ரஜினிகாந்தை முந்திவிட்டார் உலக நாயகன் கமல் ஹாஸன்.

    ரஜினிகாந்தும் சரி, கமல் ஹாஸனும் சரி ட்விட்டரில் உள்ளனர். கமல் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி ட்விட்டரில் கணக்கு துவங்கினார்.

    அவர் கணக்கு துவங்கிய 24 மணிநேரத்தில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 30 ஆயிரம் ஆனது.

    தேசிய கீதம்

    கமல் ஹாஸன் ட்விட்டரில் சேர்ந்தவுடன் போட்ட முதல் ட்வீட் ஒரு வீடியோ. அந்த வீடியோவில் அவர் தேசிய கீதம் பாடியிருந்தார். குடியரசு தினத்தன்று தேசிய கீதம் பாடி ட்விட்டருக்கு வந்தார் கமல்

    ட்விட்டர்

    ட்விட்டர்

    கமல் ஹாஸனை ட்விட்டரில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை தற்போது 5 மில்லியன் அதாவது 50 லட்சத்தை தொட்டுள்ளது. இதையடுத்து நெட்டிசன்கள் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ரஜினி

    ரஜினி

    ரஜினிகாந்த் 2014ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி ட்விட்டரில் சேர்ந்தார். அவர் ட்விட்டரில் சேர்ந்த உடன் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. ஊடகங்கள் எல்லாம் செய்தி வெளியிட்டன. அன்றைய தினம் ஒரே பரபரப்பாக இருந்தது.

    முந்திவிட்டார்

    முந்திவிட்டார்

    ரஜினிக்கு பின்பு ட்விட்டரில் சேர்ந்த கமல் அவரை முந்திவிட்டார். ரஜினியை 4.68 மில்லியன் பேர் ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள். அரசியலுக்கு வருகிறேன், கட்சி துவங்குகிறேன் என்று ரஜினி அறிவித்தார் ஆனால் கட்சி துவங்கியது என்னவோ கமல் தான்.

    அரசியல்வாதி

    அரசியல்வாதி

    கமல் ஒரு ஆன்லைன் அரசியல்வாதி, ட்விட்டரில் மட்டுமே அரசியல் பேசுவார் என்றவர்கள் அவர் கட்சி துவங்கியதும் வாயடைத்து போய்விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kamal Haasan has beat his good friend Rajinikanth on twitter. Kamal has got 5 million followers while twitter senior Rajini has 4.68 million followers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X