ஜகஜால கில்லாடி கமல்.. அப்போ புரியல இப்போ புரியுது! Thug-னா அது கமல்.. பாபநாசம் படத்தில் பார்த்த வேலை
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான தக் லைஃப் படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வி படமாக உருவாகியுள்ளது. படம் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூபாய் 100 கோடிகள் அளவுக்கு கூட வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. படம் வெளியானதில் இருந்து இணையத்தில் ரசிகர்கள் பல வகையில் படத்தை ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தக் லைஃப் படத்தின் பெயரில் இருக்கும் தக் என்பதற்கு பாபநாசம் படத்தில் விளக்கம் கொடுப்பதைப் போன்ற காட்சி வைக்கப்பட்டுள்ளது. அதை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்கள் அப்போது புரியவில்லை இப்போது புரிகிறது என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வெளியான தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன், அபிராமி, த்ரிஷா, சிம்பு, நாசர், பக்ஸ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தை கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து தயாரித்துள்ளார்கள். படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் திரைக்கதைதான்.
படத்தில் கமல்ஹாசனுடன் திருமணத்தை மீறிய உறவில் த்ரிஷா இருக்கிறார். கமல்ஹாசனை கொன்றுவிட்டதாக எண்ணும் சிம்பு, அதன் பின்னர் த்ரிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார். திரைக்கதையில் ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது இது மிகவும் முக்கியமானது. இதனை ரசிகர்கள் இணையதளத்தில் பங்கமாக கலாய்த்து வந்தார்கள். அதன் இன்னொரு வெர்ஷனை தேடிப்பிடித்து கலாய்த்து வருகிறார்கள்.

தக் விளக்கம்: அதாவது, கடந்த 2015ஆம் ஆண்டு கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பாபநாசம். இந்த படம் மலையாளத்தில் மோகன் லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தில் கமல்ஹாசன் தனது மகள்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் காட்சி உள்ளது. அதில் அவரது மூத்த மகள் 'தக்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அப்படி என்றால் என்ன என்று கேட்கும் போது, அதற்கு, " தக்-னா சல்லிப்பையன், எப்ப பாரு பொம்பள புள்ளைங்க பின்னாடியே சுத்தீட்டு ஃபோட்டோ எடுத்துட்டு இருந்தான்" என்று கூறுவார். அதன் பின்னர் கமல் தக்-னா சில்லி தானே என்று கேட்பார். அதற்கு அவரது இளைய மகள், தக்-னா நீங்க" என்று கூறுவார்.
ஜகஜால கில்லாடி: இப்போது இந்த காட்சி மற்றும் தக் லைஃப் படம் அதோடு அதன் திரைக்கதை ஆகியவற்றை ஒப்பிட்டு, அப்போ புரியல, இப்போ புரியுது" என்று பதிவிட்டு படத்தை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். இந்த பதிவுக்கு அன்றே கணித்தார் ஆண்டவர் என்று கமெண்ட்களும் குவிந்து வருகிறது. மேலும் கமல்ஹாசன் ஜகஜாலக் கில்லாடி என்றும் கமெண்ட் அடித்து வருகிறார்கள். தக் லைஃப் படம் குறித்து பேசும் ரசிகர்கள் படம் டெக்னிக்கலாக மிகவும் ஸ்ட்ராங்காக உள்ளது. ஆனால் திரைக்கதையாக படத்தில் எதுவுமே ஒட்டும் காட்சியாக இல்லை. சிம்புவின் தங்கை ஐஸ்வர்யா லட்சுமியைத் தேடிச் சென்றபோது த்ரிஷாவை ரெட் லைட் ஏரியாவில் பார்த்து அழைத்து வரும் கமல், த்ரிஷாவைப் பார்க்கச் செல்லும் போது ஏற்பட்ட விபத்துக்குப் பின்னர் சிம்புவின் தங்கையான ஐஸ்வர்யா லட்சுமியைப் பார்ப்பார் என்பது வெகுஜன ரசிகர்களுக்கு புரியாதது படத்தின் திரைக்கதையில் மற்றொரு சொதப்பல்.


Click it and Unblock the Notifications











