டிஸ்சார்ஜ் ஆன கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்.. வைரலாகும் வீடியோ!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆன நிலையில் நேராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் 16ஆம் தேதி தனது கதர் ஆடை பிராண்டை அறிமுகப்படுத்த அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் கமல்ஹாசனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் கமல்ஹாசன்.

ஈவிபி பிலிம் சிட்டி

ஈவிபி பிலிம் சிட்டி

இந்நிலையில் கடந்த வாரம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நடிகர் கமல்ஹாசன், மருத்துவமனையில் ஓய்வில் இருந்து வந்தார். தற்போது முற்றிலும் குணமடைந்த நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஈவிபி பிலிம் சிட்டிக்கு சென்றார் கமல்ஹாசன்.

வைரலாகும் போட்டோஸ்

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் கமல்ஹாசன். கமல்ஹாசன் ஈவிபி பிலிம் சிட்டிக்குள் செல்லும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதேபோல் பிக்பாஸ் படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்றுள்ள போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த வார எபிசோட்

கடந்த வார எபிசோட்


கமல்ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். இதனால் கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

டிவிட்டரில் ட்ரெண்டிங்

டிவிட்டரில் ட்ரெண்டிங்

ஆனால் அவரால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதை முன்னிட்டு #KamalHaasan என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X