twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாவலர் பிறைசூடன் பாடல்கள் மறையாது... அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன்

    |

    சென்னை : பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் நேற்றைய தினம் காலமானார்.

    அவருக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    ஃபன் எண்டெர்டெய்னர்.. சிவகார்த்திகேயன் கேரியரில் சிறந்த படம்.. ரசிகர்களின் பாராட்டு மழையில் டாக்டர்!ஃபன் எண்டெர்டெய்னர்.. சிவகார்த்திகேயன் கேரியரில் சிறந்த படம்.. ரசிகர்களின் பாராட்டு மழையில் டாக்டர்!

    இதையொட்டி நடிகரும் அரசியல் தலைவருமான கமல்ஹாசனும் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    பாடலாசிரியர் பிறைசூடன்

    பாடலாசிரியர் பிறைசூடன்

    திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை பூர்வீகமாக கொண்டவர் பிறைசூடன். கடந்த 1985ல் தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமான இவர் தொடர்ந்து சிறப்பான பல பாடல்களை எழுதியுள்ளார். இவரது முதல் பாடல் சிறை படத்திற்காக ராசாத்தி ரோசாப்பூவே.

    சிறந்த பாடலாசிரியர் விருது

    சிறந்த பாடலாசிரியர் விருது

    இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் அதிகமான பாடல்களை இவர் எழுதியுள்ளார். ராசாவின் மனசிலே படத்தில் இடம்பெற்றுள்ள சோலப் பசுங்கிளியே பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை இவர் பெற்றுள்ளார். சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

    மாரடைப்பால் மரணம்

    மாரடைப்பால் மரணம்

    இந்நிலையில் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக நெசப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து வைரமுத்து, சேரன் உள்ளிட்டவர்கள் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவரது சிறப்பான பாடல்களை பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    கமல்ஹாசன் இரங்கல்

    கமல்ஹாசன் இரங்கல்

    இந்நிலையில் இன்றைய தினம் நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறைசூடனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். தன்னுடைய புலமையை மறைத்துக் கொண்டு கொடுக்கப்படும் சூழல்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் ஏற்றபடி பாவலர் பிறைசூடன் பாடல்களை எழுதுபவர் என்று தெரிவித்துள்ளார்.

    பாடல்கள் மறையாது என உருக்கம்

    பாடல்கள் மறையாது என உருக்கம்

    மேலும் இப்போது தன்னுடைய பாட்டை விரும்பிக் கேட்பவர்களிடமிருந்து தன்னையே மறைத்துக் கெண்டுள்ளார் என்றும் ஆனால் அவரது பாடல்கள் மறையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு அஞ்சலிகள் என்றும் கூறியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதியுள்ள பிறைசூடன் 5000க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நூறு வருஷம் பாடல்

    நூறு வருஷம் பாடல்

    இவரது நூறு வருஷம் பாடல் பட்டித் தொட்டிகளில் எல்லாம் திருமண வீடுகளில் தற்போதுவரை ஒலித்து வருகிறது. ஆஸ்கார் விருதுக்கு இந்திய படங்களை பரிந்துரைக்கும் குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார். மேலும் ஏராளமான பட்டிமன்றங்களிலும் இவர் தலைமை தாங்கி வந்தார். இந்நிலையில் இவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி தமிழ் சினிமா உலகிற்கும் பேரிழப்பாக கொள்ளப்படுகிறது.

    English summary
    Actor Kamal Haasan pays tribute to Lyricist Piraisoodan in his twitter
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X