கடைசி மூச்சு வரை நன்றி மறவாத மகேந்திரனுக்கு கமல் நேரில் அஞ்சலி

By Siva

Recommended Video

Director Mahendran: இயக்குனர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கமலஹாசன்- வீடியோ

சென்னை: இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு உலக நாயகன் கமல் ஹாஸன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக் குறைவு காரணமாக காலமான இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு கமல் ஹாஸன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தான் இயக்குநராக அறிமுகமான முள்ளும் மலரும் படம் இன்றும் பேசப்பட கமல் சார் தான் காரணம் என்று உயிர் இருக்கும் வரை சொல்லிக் கொண்டே இருந்தார் மகேந்திரன்.

Kamal Haasan pays tribute to Mahendran

இந்நிலையில் மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு கமல் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நான் பார்த்து வியந்த திறமையாளர்களில் ஒருவர் மகேந்திரன். எனது ஊருக்கு பக்கத்து ஊர் காரர். அதனால் எனக்கு இன்னும் நெருக்கம். முள்ளும் மலரும் படத்தில் நான் தான் முதலில் நடிக்க வேண்டியது. நான் தான் ரஜினி, மகேந்திரன், பாலுமகேந்திரா ஆகியோரை கையை கோர்க்க வைத்து வெற்றிப் படங்கள் எடுங்கள் என வாழ்த்தினேன்.

Kamal Haasan pays tribute to Mahendran

கிட்டத்தட்ட புரொடக்‌ஷன் மேனேஜர் அளவுக்கு அந்த படத்திற்காக வேலை பார்த்தேன். அது என் மனதில் பசுமையாக இருக்கிறது. மகேந்திரனை பார்த்து தான் நிறைய இளைஞர்கள் சினிமா எடுக்க கிளம்பி வந்தனர். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X