இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்கவேண்டியவர்.. நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவுக்கு கமல் அஞ்சலி

சென்னை: பழம்பெரும் மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியின் மறைவு செய்தி அறிந்த கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

73ஆவது வயதில் நடிக்க வந்து 18 வருடங்களாக மலையாளிகளை சிரிக்க வைத்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி என புகழஞ்சலியும் செலுத்தி உள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மோகன் லால் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி

உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி

1923ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி கேரளாவின் பயனூரில் பிறந்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. 1996ம் ஆண்டு வெளியான தேசதானம் எனும் தேசிய விருது வென்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 73 வயதில் சினிமா உலகில் அடியெடுத்து வைத்த உன்னிகிருஷ்ணன் ஏகப்பட்ட படங்களில் தாத்தா நடிகராக கலக்கினார்.

உடல்நலக் குறைவால் காலமானார்

உடல்நலக் குறைவால் காலமானார்

நிமோனியா, கொரோனா வைரஸ், வயது மூப்பு என ஏகப்பட்ட பிரச்சனைகளை சிக்கி வந்த நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, நேற்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. உன்னிகிருஷ்னன் நம்பூதிரியின் மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கமல் அஞ்சலி

கமல் அஞ்சலி

"73ஆவது வயதில் நடிக்க வந்து 18 வருடங்களாக மலையாளிகளைச் சிரிக்கவைத்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இளமை துள்ளும் தாத்தாவாகக் கலையுலகில் வளையவந்தவர். இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்கவேண்டியவர் இன்று நம்மை நீங்கியிருக்கிறார். நெஞ்சார்ந்த அஞ்சலிகள்." என கமல் அஞ்சலி செலுத்தி உள்ளார்.

பம்மல் கே சம்பந்தம் காட்சிகள்

கமல்ஹாசனின் நெஞ்சார்ந்த அஞ்சலிகள் ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்கள் பம்மல் கே சம்பந்தம் பட காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், கமல் மற்றும் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தாத்தா இருக்கும் போட்டோக்களை பதிவிட்டும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மோகன் லால் இரங்கல்

மோகன் லால் இரங்கல்

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மோகன் லால் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரிபியூட்ஸ் என மலையாளத்தில் கேப்ஷன் போட்டு சிரிப்பு தாத்தாவின் சிரிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளார். மேலும், பல்வேறு மலையாள திரையுலகினரும் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X