பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் போட்டோஷுட் -ப்ரமோஷனல் வீடியோ.. ரசிகர்களை கவரும் பர்பார்மென்ஸ்!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் இன்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது.
கடந்த 5 சீசன்களை போலவே இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.
இதற்காக இந்தியன் 2 சூட்டிங்கிலிருந்து ஒரு மாத காலத்திற்கு இடைவெளி எடுத்துக் கொண்டு கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்காக வந்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
நடிகர் கமல்ஹாசனின் சிறப்பான தொகுப்பில் இன்றைய தினம் துவங்கவுள்ளது விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி. கடந்த சில வாரங்களாக அறிவிப்புகள், அதையொட்டிய ப்ரமோக்கள் என ரசிகர்களை அதிகமாக கவர்ந்த இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கவுள்ளது.

தொகுப்பாளர் கமல்ஹாசன்
விஜய் டிவியின் மிகவும் முக்கியமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கமல்ஹாசன் தொகுத்து வழங்க இதுவரை 5 சீசன்களை முடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை கடந்த 5 வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். இடையில் கொரோனா பாதிப்பால் ஒரு வாரத்திற்கு மட்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி
இதேபோல இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கடந்த 5வது சீசன் முடிந்தவுடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதை சில நாட்கள் தொகுத்தும் வழங்கினார் கமல்ஹாசன். ஆனால் விக்ரம் படத்தின் சூட்டிங்கை காரணம் காட்டி அவர் இடையிலேயே விலகிய நிலையில், நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
இந்நிலையில் தற்போது நிகழ்ச்சியின் 6வது சீசனை கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். இந்தியன் 2 படத்தின் முதல்கட்ட சூட்டிங்கை முடித்துக் கொண்டு ஒரு மாத இடைவெளியை எடுத்துக் கொண்டுள்ள அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்தடுத்த ப்ரமோக்கள்
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, இந்த ப்ரமோஷனுக்காக நடிகர் கமல்ஹாசன் மேற்கொண்ட சூட்டிங் மற்றும் ப்ரமோஷனின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் வித்தியாசமான போஸ்களில் கமல் காணப்படுகிறார்.

அதிகமான எனர்ஜி
இந்த வயதிலும் கமல்ஹாசன் எப்படி இந்த அளவிற்கு எனர்ஜியுடன் இருக்கிறார் என்பதே ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திலும் இவரது எனர்ஜியை அதிகளவில் பார்க்க முடிந்தது. தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகளுக்காக அமெரிக்கா உள்ளிட்ட இடங்களுக்கும் சென்றுவந்த கமல்ஹாசன், அதன் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











