தக் லைஃப் நாயகன் போட்ட பிளான்.. உலகமே கண்டு வியக்கும்.. முதல் முறையாக எங்கு தெரியுமா?
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் சிங்கிள் ஜிங்குச்சா பாடல் கடந்த வாரம் பிரம்மாண்ட முறையில் சென்னையில் வெளியிட்டனர். இதில் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இந்நிலையில், தக் லைஃப் படத்தின் நாயகன் வித்தியாசமான ஒரு முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், பல கோடி ரூபாய் பிசினஸ் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதன் புரோமோஷன் பணிக்காக கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், மணிரத்னம், அபிராமி, அசோக் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது படத்தில் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களை பலரும் பகிர்ந்துகொண்டனர். அப்போது நடிகர் கமல்ஹாசன் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தும் யாரும் எனக்கு ஐ லவ் யூ சொல்லவில்லை. ஆனால், நடிகர் ஜோஜூ ஜார்ஜ் காலையில் வந்தது குட் மார்னிங் என்று சொல்வதற்கு பதிலாக ஐ லவ் யூ சொல்வார் என கூறி கலகலப்பை ஏற்படுத்தினார். மேலும், இயக்குநர் மணிரத்னத்திற்கும் பட்டப்பெயர் ஒன்றை வைத்தார். அவர் வெறும் மணிரத்னம் இல்லை அஞ்சரை மணிரத்னம் என கூறினார். இந்த பெயர் சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆனது.
டிரெண்டிங்கில் முதலிடம்: விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகும் பிரம்மாண்ட படம் தக் லைஃப். இவரது நடிப்பில் வெளியான இந்தியன் 2 எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தோல்வி படமாக அமைந்திருக்கிறது. தக் லைஃப் படத்தில் நட்சத்திர பட்டாளங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் கமல் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் வெளியாகும் என்பதால் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஜிங்குச்சா பாடல் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள பாடல்களும் ரசிக்க வைத்திருக்கின்றன. மேலும், தக் லைஃப் படத்தின் புரோமோஷன் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள படக்குழு இந்த முறை பிரம்மாண்டமான முறையில் நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் புரோமோஷன்: இந்தியாவை தாண்டி தமிழ் படங்களுக்கு அதிக வரவேற்பு தரும் நாடாக அமெரிக்கா, சவுதி அரேபியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இருக்கின்றன. இங்கு தமிழ் மக்கள் அதிகம் வசிப்பதால் தமிழ் படங்களை பார்த்து ரசிக்கிறார்கள் வசூல் சாதனையும் படைக்கிறது. இந்நிலையில், தமிழ் சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில் நடிகர் கமல்ஹாசன் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் தக் லைஃப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழ் படங்களுக்கு பிசினஸ் பெரிய அளவில் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம். உலக அளவில் தமிழ் படங்களுக்கு அங்கீகாரத்தை பெற்று தந்தவர் கமல். அதேபோன்று ஆஸ்திரேலியாவிலும் அதே பாணியை பின்பற்ற இருக்கிறார். அமெரிக்காவை ஒரம் கட்டி ஆஸ்திரேலியோவை கையில் எடுத்திருப்பது என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், அவரது முயற்சிக்கு தமிழ் சினிமா தலைவணங்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
புதுமை: நடிகர் கமல்ஹாசன் படங்களில் புதுமையான செயல்கள் இல்லாவிட்டால் தான் ஆச்சரியம். தக் லைஃப் படத்தில் ஏஐ பயன்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, மன்மதன் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் சுற்றுலா செல்வது வாடிக்கை ஒட்டுமொத்த படக்குழுவும் ஆஸ்திரேலியாவுக்கு பறக்க இருக்கிறதாம். அதற்கு முன்பு வரும் மே 16ஆம் தேதி சென்னையில் இசை வெளியீீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில், படத்தின் டிரைலரும் வெளியிடப்படுகிறது.


Click it and Unblock the Notifications











