அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு நடனம் ஆடிய ரசிகர்.. கமல்ஹாசன் பாராட்டு!

சென்னை : சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனின் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு அவரின் தீவிர ரசிகர் அஸ்வின் குமார், த்ரெட்மில்லில் உடற்பயிற்சி செய்தவாறு ஆடிய நடன வீடியோ வைரலாகி வந்த நிலையில் அதை அனைவரும் பகிர்ந்தும் அவரை பாராட்டியும் வந்தனர்.

இந்நிலையில் அந்த வீடியோ தற்போது கமல்ஹாசனின் கண்களில் பட்டு அதை பார்த்து ரசித்த கமல் அந்த தீவிர ரசிகருக்கு தனது பாராட்டுக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பாடலுக்கு நடனமாடி அசத்திய அவரின் திறமையை கண்டு வெகுவாக பாராட்டிய கமல்ஹாசனின் இந்த பதிவு அனைவராலும் பகிரப்பட்டு ட்விட்டரில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

பல கோடி ரசிகர்களை

பல கோடி ரசிகர்களை

நடிகர் கமல்ஹாசன் தனது அசாத்திய நடிப்பாலும் உலகமே உற்று வியக்கும் திறமையாலும் பல படங்களில் நடித்து பல கோடி மக்களை ரசிகர்களாக கொண்டு உலக நாயகனாக வலம் வரும் இவர், இந்திய சினிமா துறையில் எப்போதும் முன்னோக்கிய பார்வையை கொண்டவராக இருந்து வருகிறார்.

வெள்ளி விழா

வெள்ளி விழா

இந்நிலையில் இவர் நடித்த அபூர்வ சகோதரர்கள் 1989ல் வெளியாகி திரையில் சக்கபோடு போட்டு வெள்ளி விழாவை கொண்டாடியது மட்டுமல்லாமல் இந்த படம் இந்தி போன்ற பல மொழிகளிலும் வெளியிடப்பட்டது. கமல்ஹாசன், கிரேசி மோகன் கூட்டணியில் உருவான இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்வித்தது மட்டுமல்லாமல் இவரின் நடிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

த்ரெட்மில்லில் நடனம்

த்ரெட்மில்லில் நடனம்

சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த நடிகர் என பல விருதுகளை இந்த படம் வெளியாகி தட்டிச்சென்றது. இதில் உருவான அனைத்து பாடல்களும் வெற்றி அடைந்த நிலையில் தற்போது பல பத்து ஆண்டுகளை கடந்தும் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகிறது.

நடனம் ஆடி

நடனம் ஆடி

கமல்ஹாசனின் தீவிர ரசிகர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு உடற்பயிற்சி கூடத்தில் த்ரெட்மில்லில் உடற்பயிற்சி செய்தவாறு அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு அதே நடனத்தை ஆடியவாறு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். நம் கண்முன்னே ஒரு நிமிடம் கமல்ஹாசனை கொண்டுவந்த அந்த நடன வீடியோ இணையதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வந்தது.

அச்சு அசலாக

அச்சு அசலாக

இந்நிலையில் கமல்ஹாசனைப் போன்று உருவத்திலும் பார்க்க ஒரே மாதிரி இருந்த அவர், இந்த பாடலில் வரும் நடனத்தை
அப்படியே ஆடி காட்டியவாறு வெளியான அந்த வீடியோவுக்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி வந்த நிலையில் தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் அந்த வீடியோவை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நடனத்தை ஆடிய தன்னுடைய ரசிகருக்கு பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறார்.

கமல்ஹாசன் பெருமிதம்

கமல்ஹாசன் பெருமிதம்

இந்த ட்விட்டர் பதிவில் கமல்ஹாசன் கூறியதாவது " நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!

சந்தோசத்தில்

சந்தோசத்தில்

கமல்ஹாசனிடமிருந்து இந்த பாராட்டுகளை சற்றும் எதிர்பாராத அந்த ரசிகர் சந்தோசத்தில் துள்ளி குதித்தது மட்டுமில்லாமல், மகிழ்ச்சியில் அதற்க்கு ரீட்வீட் மூலம் நன்றியும் தெரிவித்துள்ளார் அதில் " அய்யா அப்பனே இந்த உங்கள் பாராட்டு பதிவை நான் எங்கள் வீட்டில் பிரேம் போட்டு மாட்டி வைக்க போகிறேன்" என ஆனந்தத்தில் திளைத்தவாறு கூறியிருந்தார்.

உலக நாயகன்

உலக நாயகன்

இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த ரசிகரின் வீடியோ பதிவை ஷேர் செய்து தனது பாராட்டுகளை சொல்லி மகிழ்ந்தார் மகிழ்வித்தார் நம்ம உலக நாயகன். இவ்வாறு தனது பாராட்டுகளை தெரிவித்திருந்த கமல்ஹாசனின் பதிவு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X