தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் ஆரம்பத்திலேயே அருமை.. கமல்ஹாசன் சொன்ன மேட்டரை பாருங்க!
சென்னை: தமிழ்நாட்டில் போதைப் பொருள் ஒழிப்பை மட்டும் விஜய் கையில் எடுத்துள்ளார் என்றும் டாஸ்மாக் எல்லாம் போதை இல்லையா என ட்ரோல்கள் பறக்கத் தொடங்கின. உடனடியாக 717 மதுக்கடைகள் மூட உத்தரவு பிறப்பித்து சிக்சர் அடித்துள்ளார் சிஎம் விஜய்.
இந்நிலையில், அவருக்கு தனது மனமார்ந்த நன்றியை நடிகரும் மநீம தலைவருமான எம்.பி கமல்ஹாசன் தனது ட்விட்டர் போஸ்ட் மூலமாக பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்களை விஜய் சந்தித்த நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் நேரில் சந்திக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தம்பி விஜய்க்கு கமல் பாராட்டு: "வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய்
@TVKVijayHQ
அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.
வாழ்த்துகள்." என பதிவிட்டுள்ளார்.
லியோ 2: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கமல்ஹாசன் விஜய்க்கு போன் செய்து பேசுவார். டிரக் ஃப்ரீ சொசைட்டியை உருவாக்க போராட வரவேண்டும் என தற்போது கமல்ஹாசன் விஜய்யை பாராட்டியதை பார்த்த ரசிகர்கள் லியோ 2 படத்தையும் லைவிலேயே காட்டிடுங்க பாஸ், இனிமே தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதை விட லைவில் பார்ப்பதே ரொம்ப நல்லா இருக்கு என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
கமல்ஹாசனை சந்திப்பாரா விஜய்?: அரசியல் தலைவர்களை விஜய் சந்தித்து வரும் நிலையில், கமல்ஹாசனை சந்திப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. சட்டமன்றத்தையே ஜாலியாக சிரிப்பொலி கேட்கும் இடமாக மாற்றிவிட்டார் விஜய் என்றும் கூடிய சீக்கிரமே மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துக் காட்டிவிட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications