திரை ரசனையின் பொற்காலம்... சிவாஜி கணேசனின் பிறந்தநாளில் கமல் வாழ்த்து

சென்னை : திரையுலக ஜாம்பவான் சிவாஜி கணேசனின் பிறந்ததினம் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Recommended Video

Sivaji Ganesan 93rd Birth Anniversary | MK Stalin | Sivaji Ganesan Memorial

திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து வணக்கத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசன்

நடிகர் சிவாஜி கணேசன்

தன்னிகரில்லாத நடிப்பின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் நடிகர் திலகம் என்று பாராட்டுக்குரிய சிவாஜி கணேசன். தனது முதல் படமான பராசக்தியின் மூலமே தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர். முதல் படம் என்று கூற முடியாத அளவில் அவரது நடிப்பு அதில் பேசப்பட்டது. தொடர்ந்து பல காவியப் படைப்புகள் அவர் பெருமையை வெளிப்படுத்தும்வகையில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

உலக கலைஞன்

உலக கலைஞன்

உலக அளவில் சிறப்பான கலைஞனாக விளங்கிய நடிகர் திலகம் நடிப்பில் வெளியான பாசமலர் உள்ளிட்ட படைப்புகள் அவரது பெருமையை தொடர்ந்து பறைசாற்றி வருகின்றன. அவர் நடிப்பில் வெளியாகாத கேரக்டரே இல்லை என்று பலரும் பாராட்டும் வண்ணம் அனைத்துவிதமான கேரக்டர்களையும் அவர் நடித்து தள்ளி விட்டார்.

93வது பிறந்தநாள்

93வது பிறந்தநாள்

அவர் ஆளுமை அனைத்து நடிகர்களிடமும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கமல் வாழ்த்து

கமல் வாழ்த்து

இந்நிலையில் நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கமல்ஹாசனும் சிவாஜி கணேசனுக்கு தனது ட்விட்டர் பக்கத்தின்மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிப்புக் கலையின் கொடுமுடி கண்டவர் என்றும் திரை ரசனையின் பொற்காலம் ஆனவர் என்றும் மனங்களில் இன்னும் காலம் ஆகாதவர் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சிவாஜிக்கு வணக்கம்

சிவாஜிக்கு வணக்கம்

மேலும் என்றென்றைக்குமான கலைஞரான சிவாஜி கணேசன் பிறந்தநாளில் அவரை வணங்குவதாகவும் கமல் தெரிவித்துள்ளார். மேலும் தான் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்த தேவர் மகன் படத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். தேவர் மகன் படம் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசனின் திரையுலக பயணத்தில் மைல் கல்லாக பார்க்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X