'இந்தியன் 2' ஷங்கரை அடிச்சுக்க ஆளே இல்லை.. ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்து மிரண்டு போன கமல்!

சென்னை : இந்தியன் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்த கமலஹாசனே மிரண்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் , பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் அடுத்த ஆண்டு 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Kamal Haasan praised Shankar after seeing the first copy of Indian 2

படப்பிடிப்பில் விபத்து : இந்தியன் 2 படத்தின் இரண்டாம் பாகம் கேட்டு ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியானது. படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, லைகாவுடனான பிரச்சனை போன்றவற்றால் இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டன.

விறுவிறுப்பான படப்பிடிப்பு : லைகாவுடனான பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டதை அடுத்து, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான நடந்து வருகிறது. கடந்த மாதம், தென்னாப்பிரிக்காவில், பல்லாயிரம் அடி உயரத்திலான விமான சாகசக் காட்சிகள் உள்ளிட்ட ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் சுமார் 12 நாட்கள் நடத்தப்பட்டது.

Kamal Haasan praised Shankar after seeing the first copy of Indian 2

கிளைமாக்ஸ் காட்சி : பிரிட்டிஸ் ஆட்சிகாலத்தில் இருந்த ரயில் தென்னாப்பிரிக்காவில் பாதுகாத்து வைத்திருப்பதாலும், இந்த ரயில் உலகத்தில் வேறு எங்கும் இல்லை என்பதால் படக்குழு தென்னாப்பிரிக்கா சென்று படப்பிடிப்பினை நடத்தியது. இங்குதான் இந்தியன்2 படத்தின் முக்கியமான கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஷங்கரை அடிச்சுக்க ஆளே இல்லை : கமலஹாசன் தனது பகுதி டப்பிங்கை நிறைவு செய்தார். அப்போது, ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்து கமல் மகிழ்ச்சியில் திகைத்து போய், ஷங்கரை அடிச்சுக்க ஆளே இல்லை என்று புகழ்ந்து தள்ளி உள்ளாராம். இப்படம் சும்மா தரமானதாக வேறமாதிரி இருக்கும் என்று ஷங்கரை ஏகத்திற்கும் புகழ்ந்துள்ளார் கமல் . உலகநாயகனின் வாயால் இப்படி ஒரு பாராட்டை கேட்ட ஷங்கர் மகிழ்ச்சியில் உச்சத்தில் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X