அக்ஷராவை ஹேப்பியாக்கிய கமல்.. கடுப்பான பிரியங்கா.. கட்சி தாவும் ராஜு.. வேற லெவல்!
சென்னை: அக்ஷராவை தனக்கு பிடிக்கும் என்பதற்காக மட்டுமே லைக் போட்டேன் என பிரியங்காவின் அழுத்தம் காரணமாக ராஜு பாய் மாற்றி மாற்றி பேசிய நிலையில், கமல் அக்ஷராவின் கதைக்கு பாராட்டுக்களை சொன்னது அவரை ரொம்பவே ஹேப்பியாக்கியது.
கதை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக போலி கதைகளை சொல்ல வேண்டாம் என்றும் கூடுதல் ஸ்பைஸ் சேர்க்க வேண்டாம் என்றும் ஒவ்வொருத்தரின் அனுபவத்தை உண்மையாக சொன்னாலே போதும் என்றும் கமல் நெத்தியடியாக அடித்து விட்டார்.
கமல் அக்ஷராவை புகழ்ந்து பேச பேச பிரியங்கா லைட்டா காண்டாக ஆரம்பித்து விட்டார்.

என் வாழ்விலும் அண்ணன்
அப்பா இல்லாத வீட்டை அண்ணன் எப்படி ஹீரோவாக இருந்து காப்பாற்றுவார் என்பது எனக்கும் தெரியும். அக்ஷரா சொன்ன கதையில் அவர் அண்ணன் ஹீரோவாக இருந்தது தவறில்லை. அவர் அவருடைய கதையை சொல்கிறார் அதில், சுவாரஸ்யம் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஏன் என கமல் ஆரம்பமே பிரியங்காவுக்கு பலத்த அடி கொடுத்து விட்டார்.

கட்சித்தாவிய ராஜு
அக்ஷராவை தனக்கு பிடிக்கும் என்கிற காரணத்தினால் அவருக்கு லைக் போட்டேன் எனக் கூறி ராஜு பாய் அக்ஷராவின் கதைக்கு போட்ட லைக்கை பிரியங்காவின் அழுத்தம் காரணமாக மாற்றி பேசியதை அறிந்து கொண்ட கமல் என்ன பிரியங்கா அப்படியெல்லாம் மாத்துற அளவுக்கு மிரட்டுறீங்களா என்கிற தொனியிலேயே கேட்டு விட்டார்.

உங்க லைக்குக்காக இல்லை
ஒவ்வொரு போட்டியாளரும் அவர்களின் சொந்த கதைகளை சொல்லும் போது உண்மையாக இருக்க வேண்டுமே தவிர உங்க லைக்குக்காகவோ டிஸ்லைக்குகாகவோ சொல்லக் கூடாது என ராஜுவுக்கு சின்ன டோஸ் கொடுத்து சாண்டி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டில் சொன்ன ஜாலியான கதை பற்றியும் பேசினார். 3வது சீசன் போல இன்னொரு சீசன் வராதா என ஏகப்பட்ட ரசிகர்கள் காத்திருப்பது போல கமலும் காத்திருக்கிறார் போலவே தெரிகிறது.

பிரியங்காவுக்கு எரிச்சல்
தன்னுடைய கதையை சொல்லும் போது பிரியங்கா அவங்க கோல் பற்றியே சொல்லவில்லை. ஆனால், அக்ஷரா விஷயத்தில் மட்டும் அவளுடைய கோல் பற்றி சொல்ல வேண்டும் என மீண்டும் மீண்டும் கமலிடம் இருந்து எஸ்கேப் ஆக மட்டுமே பேசி வந்தார். ஆனால், தொடர்ந்து அக்ஷராவை பிரியங்கா பல இடங்களில் வெறுத்து ஒதுக்கியதை பார்த்த ரசிகர்கள் இன்னும் எங்களை நீ பைத்தியம்னே நினைச்சிட்டு இருக்கியா என சமூக வலைதளங்களில் கேட்க ஆரம்பித்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











