மனதார பாராட்டிய கமல்..இதை விட சிறந்த பிறந்தநாள் பரிசு வேறு இல்லை...ஆர்யா நெகிழ்ச்சி!

சென்னை: ஆர்யா, பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

கடந்த வாரம் இந்த படத்தின் தலைப்பு & ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இதையடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் ஆர்யாவை பாராட்டி உள்ளதாக ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விரைவில் வெளிவரும்

விரைவில் வெளிவரும்

இந்த படத்தில் ஆர்யாவுடன் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரலான புகைப்படம்

வைரலான புகைப்படம்

வடசென்னையில் உள்ள பாக்சர்களின் கதையை மையமாக கொண்ட படம் தான் சார்பட்டா பரம்பரை. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஆர்யா பாக்ஸிங் ரிங்கில் நிக்க கூடிய படமும், பிறகு படக்குழு வெளியிட்ட சில படங்களும் இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டுகளையும் பெற்றது.

காத்திருக்கும் ஜாக்பாட்

காத்திருக்கும் ஜாக்பாட்

சார்பட்டா பரம்பரை படம் ஒரு புறம் இருக்க ஆர்யாவின் டெடி திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாக காத்துள்ளது. அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது இதையடுத்து விஷாலுடன் இணைந்து எனிமி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இவை அனைத்தும் வெற்றி பெற்றால் ஆர்யாவுக்கு ஜாக்பாட் தான்.

ஆர்யாவின் ட்வீட்

ஆர்யாவின் ட்வீட்

சார்பட்டா பரம்பரை பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த கமல்ஹாசன் ஆர்யாவை நேரில் அழைத்து மனதார பாராட்டி உள்ளார். அதை பற்றி ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுயிருந்ததாவது "இதை விட ஒரு சிறந்த பிறந்தநாள் பரிசு இருக்காது. இன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத சிறந்த நாள். சார்பட்டா பரம்பரை படத்திற்காக நான் செய்த வேலை குறித்து நீங்கள் கருத்து கூறியதற்கு மிகவும் நன்றி. இன்றும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறேன்".

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X