twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிங்கப்பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி... நெகிழ்ந்து பாராட்டிய கமல்ஹாசன்!

    |

    சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், 43வது நாளான இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் கலந்துரையாடினார்.

    அப்போது, உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த இளைஞரை தோளில் தூக்கிக்கொண்டு ஓடிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை பாராட்டி பேசினார்.

    மிரட்டலான அரண்மனை 3 படம்... இன்று ஓடிடியில் ரிலீஸ்! மிரட்டலான அரண்மனை 3 படம்... இன்று ஓடிடியில் ரிலீஸ்!

    இதுபோன்ற போலீஸ்காரர்களும் இருக்கிறார்கள் என்று மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக ராஜேஸ்வரி திகழ்கிறார் என்றார்.

    பருவமழை தீவிரம்

    பருவமழை தீவிரம்

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்தவாரம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. பலஆயிரம் கணக்கான மரங்கள் சாய்ந்தன.

    இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி

    இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி

    சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மழையில் நனைந்து விரைத்து உயிருக்குப் போராடிக்கொண்டு, மயங்கிய நிலையில் இருந்த இளைஞரை தன் தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் சேவையை கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

    பாராட்டிய கமல்

    பாராட்டிய கமல்

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டுக்கு வந்த கமல்ஹாசன், மீடியாக்களிலும், செய்திகளிலும் போலீசார்கள் அத்துமீறிய செய்திகள் பரவலாக வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்கள் தொடர்ச்சியான நற்செயல்களை, வீரச் செயல்களை செய்து நாம் உள்ளத்தை வென்று இருக்கிறார். இதுபோன்ற போலீஸ்காரர்களும் இருக்கிறார்கள் என்று மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், போலீஸ்காரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் ராஜேஸ்வரி என்றார்.

    பெருமை அடைகிறேன்

    பெருமை அடைகிறேன்

    அதுமட்டுமல்ல, ஐந்து வருடங்களுக்கு முன்னால் வீர தீரசெயல் புரிந்ததற்காக திருச்சூரி கொடுக்கப்பட்ட பரிசை வென்ற முதல் தமிழ்ப் பெண்மணியும் இவர் தான் என்றார். இந்த மேடையில் அவரை புகழ்வதில் அவரைப் பாராட்டி நான் பெருமை அடைகிறேன் என்று கமல் கூறினார்.

    English summary
    Kamal Haasan praises police inspector Rajeswari.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X