எனக்கு கிடைத்த விருது என்றே நினைக்கிறேன்.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரஜினிகாந்தை பாராட்டிய கமல்!
சென்னை: தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிகாந்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் மனமார கமல் பாராட்டி உள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட போதே ட்விட்டரில் வாழ்த்தி இருந்தார் நடிகர் கமல்ஹாசன்.
இந்நிலையில், பல கோடி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சனிக்கிழமை எபிசோடில் முதல் வார்த்தையாகவே ரஜினிகாந்தை பாராட்டி கமல் பேசியது அனைவரது பாராட்டுக்களையும் அள்ளி உள்ளது.

கமல் பாராட்டு
தேசிய விருது வாங்கிய தென்னிந்திய கலைஞர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் சனிக்கிழமை எபிசோடில் பாராட்டி நிகழ்ச்சியை தொடங்கியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக தனது நண்பர் நடிகர் ரஜினிகாந்தை பாராட்டியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி உள்ளது.

என் குடும்பத்தினருக்கு விருது
சிவாஜி கணேசன், கே. பாலசந்தர் மற்று ரஜினிகாந்த் என தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாதா சாகேப் பால்கே விருதை பெற்று வருவது தனக்கு பெரும் மகிழ்ச்சி என கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பேச அரங்கமே கைதட்டி, விசிலடித்து அரங்கையே அதிர செய்தனர்.

எனக்கு கிடைத்த விருது
நண்பர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது எனக்கே கிடைத்த விருது போல நினைத்து மகிழ்கிறேன் என கமல்ஹாசன் பரந்த மனதுடன் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றதை பல கோடி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாராட்டி இருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஏன் கொடுக்கிறாங்க
மேலும், தாதா சாகேப் பால்கே விருது ஏன் கொடுக்கப்படுகிறது என்பது குறித்த விளக்கத்தையும் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பேசி இருந்தார். ஆண்டுக்கு ஒரு முறை கொடுக்கப்படும் விருது இதுவல்ல. இத்தனை ஆண்டுகள் சினிமாவில் ஒருவித Cinema Excellence உள்ள நபருக்கு கொடுக்கப்படும் விருது என்றும் கூறி ரஜினிகாந்தின் திறமைக்கு கிடைத்த மரியாதையை மனதார பாராட்டி இருந்தார்.


Click it and Unblock the Notifications











