மதவெறி.. சாதிவெறி.. அடித்து நொறுக்கும் ஆயுதம் ஜிப்ஸி.. கமல் பாராட்டு!
சென்னை : ஜிப்ஸி படம் பார்த்த கமலஹாசன் இயக்குனரை வெகுவாக பாராட்டினார்.
Recommended Video
ஜீவா நடிப்பில் கடந்த வெள்ளி அன்று வெளியான திரைப்படம் தான் ஜிப்ஸி இப்படத்தை குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது, சென்சார் போர்டு இப்படத்தில் உள்ள பல சீன்களை நீக்க வேண்டும் என்று கூறியது, அந்த காட்சிகளை கட் செய்தாலும் ஜிப்ஸி திரைப்படம் அசால்டாக ரசிகர்கள் மத்தியில் ஜெயித்துள்ளது.

இப்படம் நடிகர் ஜீவாவிற்கு ஒரு நல்ல கம்பெக் படமாக அமைந்துள்ளது. நட்டாஷா சிங் நடிப்பு மிகவும் பாராட்டபட்டது, படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் படத்தில் அதனை காட்சிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. ராஜு முருகன் தனது நேர்த்தியான திரைக்கதையை கையாண்ட விதம், தெறிக்கவிடும் வசனங்கள் என இவை அனைத்தும் படத்தை விறு விறுப்பாக நகர்த்தியது. படத்தை பார்க்க தூண்டியதே படம் ரீலிஸ்க்கு முன்பு வெளியான ஸ்னீக் பிக் காட்சிகள் தான் என்று ரசிகர்கள் பலர் கூறுகின்றனர்.

படத்தை பார்த்துவிட்டு உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் ராஜு முருகன், நடிகர் ஜீவா மற்றும் படத்தின் ஹீரோயின் நட்டாஷா சிங் ஆகியோரை அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் படத்தை பற்றி அவர் கூறியதாவது

மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்து நொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் "ஜிப்ஸி" படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பாளர் ஜசரி கணேஷ் ஆகியோர் ஜிப்ஸி படக்குழுவினருடன் இருந்தனர். அவர்கள் கமலை சந்தித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











