திமுக கூட்டணிக்கு மாபெரும் முரசொலியாக போகுது பராசக்தி.. ஒரே போடாக போட்டுடைத்த MP கமல்ஹாசன்!

சென்னை: பராசக்தி திரைப்படம் மூலம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பேசி வரும் நிலையில், அதெல்லாம் இல்லைங்க, இந்த படம் எங்க கூட்டணிக்கான மாபெரும் முரசொலி தான் என்பதை அழுத்தம் திருத்தமாக உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் இன்பநிதி இந்த படத்தை வெளியிட்டுள்ள நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா திமுக அரசுக்கான பிரசார படமாகவே பராசக்தி படத்தை பட்டும் படாமல் எடுத்து வைத்துள்ளார் என பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதை உறுதிப்படுத்துவது போல கமல்ஹாசனின் கடிதம் அமைந்துள்ளது.

Kamal Haasan praises Udhayanidhi Stalin for Parasakthi release and its their election campaign

எம்பி கமல்ஹாசனின் லெட்டர் பெடில் இருந்து பராசக்தி படத்துக்கான பாராட்டுக் கடிதத்தை கமல்ஹாசன் வெளியிட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

Kamal Haasan praises Udhayanidhi Stalin for Parasakthi release and its their election campaign

முரசொலியாகும் பராசக்தி: அன்புள்ள இளவல் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, பராசக்தி படத்தை பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலில் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம் என்று கூறியுள்ளார்.

பின்குறிப்பில் பராசக்தி படக்குழுவுக்கு பாராட்டு: இந்த பயோ ஃபிக்‌ஷனை இயக்கிய சுதா கொங்கராவுக்கும் வெற்றியை காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனுக்கும், படத்தில் சிறப்பாக நடித்த ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி. கே. சந்திரன் மற்றும் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் என கமல் வாழ்த்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X