பிக் பாஸ் தமிழ் 6.. முதல் நாளிலேயே ஜிபி முத்துவை இப்படி பிராங்க் செய்து அலற விட்டுட்டாரே கமல்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் கன்டென்டே ஜிபி முத்து தான் என்பதை கமல்ஹாசனும் நன்றாகவே புரிந்து கொண்டார் என்று தான் தெரிகிறது.
முதல் ஆளாக ஜிபி முத்துவை உள்ளே அனுப்பி அவரை பயமுறுத்தி கமல் செய்த பிராங்க் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதுவரை இருந்த பிக் பாஸ் சீசன்களை விட இந்த முறை பல போட்டியாளர்கள் அறிமுகமே இல்லாதவர்கள் என்பதால், அவர்களின் பர்ஃபார்மன்ஸ் தான் ரசிகர்களை கவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவன் ஜிபி முத்து என்ட்ரி
"செத்தப்பயலே.. நாரப்பயலே" என லெட்டர் படிக்கிறேன் என்கிற பெயரில் வாய்க்கு வந்தபடி பேசியே டிக் டாக் பிரபலமான ஜிபி முத்து டிக் டாக் தடை செய்யப்பட்டதும் யூடியூப் ஆரம்பித்து பிரபலமானார். சமீபத்தில் டிடிஎஃப் வாசன் பைக்கில் பின்னாடி உட்கார்ந்து சென்ற வீடியோ பெரியளவில் பிரச்சனையை உருவாக்கியது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளார்.

எச்சரித்த கமல்
பிக் பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக கலந்து கொண்ட ஜிபி முத்துவை வெளியே பேசுவது போல உங்க வட்டார வழக்கில் எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள் பேசி விட முடியாது என இப்பவே எச்சரித்து அனுப்பி உள்ளார். அதையெல்லாம் தாண்டி தலைவன் சம்பவம் செய்யப் போறான்னு ரசிகர்கள் ஜிபி முத்து ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். உள்ளே போனதுமே 2 கக்கூஸ் தான் இருக்குன்னு ஜிபி முத்து ஆரம்பித்து விட்டார்.

ஒரே பயம்
தெனாலி படத்தில் கமல் எல்லாமே பயம் என நடித்து இருப்பார். அதே போல முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்த ஜிபி முத்து யாருமே வரலையேன்னு பயப்பட ஆரம்பித்தார். அவர் பயப்படுவதை பார்த்த கமல், இதை வைத்தே கன்டென்ட் பண்ணிட வேண்டியது தான் என நினைத்து பண்ண பிராங்க் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.

கமல் பிராங்க்
பிளாஸ்மா டிவியில் தோன்றிய கமல் டெக்னிக்கல் கோளாறு இன்னும் ஒரு நாளைக்கு மற்ற போட்டியாளர்கள் யாருமே உள்ளே வரமாட்டாங்க என சொன்னதுமே ஜிபி முத்துவுக்கு டர்ரு விட்டு போய்விட்டது. கமல் இப்படியொரு பிராங்கை ஜிபி முத்துவை வைத்து செய்வார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

அலறிய ஜிபி முத்து
கமல் அப்படி சொன்னதுமே ஜிபி முத்து அலறிவிட்டார். ஒரு நாள் எல்லாம் தனியாக இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது சார், பயந்து அழுதுடுவன்னு ஓப்பனாகவே சொல்லி விட்டார். நல்லவேளையாக அசல் கோளாறு உள்ளே இரண்டாவது போட்டியாளராக வந்ததும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டார். முதல் நாளே இப்படி இருக்கே, இன்னும் போக போக எப்படி இருக்கப் போகுதோன்னு ரசிகர்கள் ஆர்வத்துடன் 24 மணி நேரமும் ஜிபி முத்துவின் அட்ராசிட்டியை பார்க்க காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











