twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் ஒரு தீர்க்கதரிசியோ?: 6 ஆண்டுகளுக்கு முன்பே 'எபோலா' பற்றி எச்சரித்தாரே

    By Siva
    |

    சென்னை: கடந்த 2008ம் ஆண்டு வெளியான தசாவதாரம் படத்திலேயே கமல் எபோலா குறித்து எச்சரித்தது தற்போது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 4 ஆயிரத்து 500 பேரின் உயிரை குடித்த எபோலா வைரஸ் அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்துவிட்டது. தற்போது உலக மக்கள் பயப்படுவது எபோலா வைரஸை பற்றி தான். காரணம் வைரஸ் தாக்கினால் பெரும்பாலும் மரணம் தான்.

    இந்நிலையில் கமல் 6 ஆண்டுகளுக்கு முன்பே எபோலா பற்றி எச்சரித்தது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    எபோலா

    எபோலா

    கமல் ஹாஸன் கதை, திரைக்கதை எழுத கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய படம் தசாவதாரம். பத்து கெட்டப்பில் வந்த கமல் அந்த படத்தில் ஒரு காட்சியில் எபோலா குறித்து எச்சரித்திருப்பார்.

    பார்சல்

    பார்சல்

    அமெரிக்காவில் இருந்து ஒரு பார்சல் பாட்டி வேடத்தில் இருக்கும் கமல் கையில் கிடைக்குமே. அந்த காட்சியில் தான் கமல் இந்த பார்சலில் இருப்பது பயோ ஆயுதம். இது எபோலா-மார்பர்க் ஆகும். மிகவும் ஆபத்தானது என்று கூறியிருப்பார். படத்தை பார்த்தவர்கள் கமல் ஏதோ புரியாத ஒன்றை பற்றி பேசுகிறார் என்று நினைத்தனர். தற்போது தான் அவர்களுக்கு எபோலா என்றால் என்னவென்பது தெரிந்துள்ளது.

    சுனாமி

    சுனாமி

    2004ம் ஆண்டு சுனாமி தாக்கி நம் நாட்டில் பலர் பலியாகினர். ஆனால் 2003ம் ஆண்டு வெளியான படத்தில் கமல் சுனாமி என்ற வார்த்தையை தெரிவித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் படத்தை பார்த்த போது சுனாமி என்பது ஏதோ புதிய வார்த்தை என்பது மட்டுமே பலருக்கு புரிந்தது. மறு ஆண்டு தான் சுனாமியின் அர்தத்தை மக்கள் தெரிந்து கொண்டனர்.

    ஹேராம்

    ஹேராம்

    கடந்த 2000ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ஹேராம் படத்தில் கலவர காட்சி இருந்தது. இந்த படம் ரிலீஸான 2 ஆண்டுகள் கழித்து குஜராத்தில் கலவரம் நடந்தது.

    வேட்டையாடு விளையாடு

    வேட்டையாடு விளையாடு

    வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் இரண்டு சைக்கோ கொலைகாரர்களை கைது செய்வார். இந்த படம் ரிலீஸான சில மாதங்கள் கழித்து நொய்டாவில் மொனிந்தர்-சதீஷ் ஆகியோர் பலரை கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

    முன்கூட்டியே

    முன்கூட்டியே

    சுனாமி, கலவரம் என்று சில சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே கமல் படத்தில் அவை காட்சியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kamal Haasan has warned about Ebola six years ago in his movie Dasavatharam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X