லியோ டப்பிங், சென்சார் செய்யும் போது கமல் இருந்தார்.. எல்சியூ கனெக்ட்டை ஓபன் பண்ண லோகேஷ் கனகராஜ்!

சென்னை: லியோ படம் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாக உள்ள நிலையில் அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லேட்டஸ்டாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் லியோ படம் குறித்தும், ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் மற்றும் எல்சியூ கனெக்சன் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து ஹிட் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ஒரு மெகா பிளாக்பஸ்டர் படமாக லியோ படத்தை கொடுக்க ரெடியாகி உள்ளார்.

Kamal Haasan presents at Leo dubbing and Censor revealed by Lokesh Kanagaraj

லியோ எல்சியூ தானா?: லியோ படம் தொடங்கியதில் இருந்தே கண்டிப்பா எல்சியூவாகத்தான் இருக்கும் என இதுவரை ரசிகர்கள் டிகோட் செய்து வருகின்றனர். மேலும் இந்த படம் ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்றும் கூறி வருகின்றனர்.

அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், இன்னும் 10 நாள் தான் இருக்கு அதுவரை கொஞ்சம் பொறுமையா இருங்க, இந்த படம் எல்சியூ வா அல்லது ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸா இல்லை வேற படமா என்பது தியேட்டரில் வந்து பார்க்கும்போது நிச்சயம் தெரியவரும் எனக்கு கூறியுள்ளார்.

Kamal Haasan presents at Leo dubbing and Censor revealed by Lokesh Kanagaraj

கமல்ஹாசன் வந்திருந்தார்: மேலும், கமல்ஹாசன் லியோ படத்தின் டப்பிங் நடக்கும் போது அதே ஸ்டுடியோவில் இருந்தார் என்கிற தகவல் வந்ததே அது ரூமரா? உண்மையா? கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், கமல் சார் இருந்தது உண்மைதான். சொல்லப்போனால் அவர் எங்கே போனாலும் அங்கே இருப்பார். நாங்க இப்ப சமீபத்தில் லியோ படத்தின் சென்சார்க்கு சென்றிருந்தோம் அங்கேயும் கமல் சார் வந்திருந்தார். ஆனால், லியோவில் அவர் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருங்கள் எனக்கூறி கடைசிவரை சஸ்பென்சை மெயின்டைன் செய்து விட்டார் லோகேஷ் கனகராஜ்.

ஆனால், எல்சியூ இல்லை என்பதையும் கமல் நடிக்கவில்லை என்பதையும் லோகேஷ் கனகராஜ் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போ ஏதோ ஒரு சஸ்பென்ஸ் நிச்சயம் இருக்கும் என்றும் கண்டிப்பாக கிளைமேக்ஸில் எல்சியூ கனெக்ட் இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X