மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்.. பாராட்டித் தள்ளிய மோகன்லால்.. சூடுபிடித்த ‘விக்ரம்’ புரமோஷன்!

சென்னை: மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'விக்ரம்' படத்தின் புரமோஷனை நடத்தி உள்ளார் கமல்ஹாசன்.

ஒரே மேடையில் மோகன்லால் உடன் கமல் கெத்தாக நடந்து வந்து பிக் பாஸ் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

முன்னதாக கேரளாவில் 'விக்ரம்' படத்தின் புரமோஷனை மேற்கொண்ட கமல் மம்மூட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும் பேசி கேரள ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ராஜமெளலி ரேஞ்சுக்கு

ராஜமெளலி ரேஞ்சுக்கு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், சூர்யா, விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், ஷங்கர், ராஜமெளலி ரேஞ்சுக்கு விக்ரம் படத்துக்காக புரமோஷன் செய்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

கேன்ஸ் முதல் கேரளா வரை

கேன்ஸ் முதல் கேரளா வரை

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழா முதல் கேரளா வரை விக்ரம் படத்திற்கு கமல் வேறலெவலில் புரமோஷன் செய்து வருகிறார். பான் இந்தியா படமாக வெளியாக உள்ள விக்ரம் படத்துக்காக பாலிவுட்டுக்கு சென்று புரமோஷன் செய்த கமல் தற்போது கேரளாவிலும் பெரிய அளவில் புரமோஷனை செய்துள்ளார்.

மலையாள பிக் பாஸ்

மலையாள பிக் பாஸ்

கேரள ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி வரும் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் கமல். மோகன்லால் மற்றும் கமல்ஹாசன் என இரு பிக் பாஸ் தொகுப்பாளர்களை ஒரே மேடையில் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை தட்டித் தூக்கி வருகின்றனர்.

மோகன்லால் பாராட்டு

மோகன்லால் பாராட்டு

இந்தியாவின் சினிமா லெஜண்ட் என மற்றொரு சினிமா லெஜண்ட் ஆன மோகன்லால் கமல்ஹாசனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாராட்டியது தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி உலகளவில் உள்ள கமல் ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. விக்ரம் படத்தின் டிரைலரையும் மலையாள பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு காண்பித்தார் கமல்.

மம்மூட்டியுடன் நடிக்க ஆசை

மம்மூட்டியுடன் நடிக்க ஆசை

மேலும், கேரளாவில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன் நடிகர் மம்மூட்டியுடன் முழுக்க முழுக்க மலையாள படம் ஒன்றில் இணிஅந்து நடிக்க ஆசைப்படுவதாகவும், கூடிய விரைவிலேயே கேரளத்தின் இளம் நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு விக்ரம் படத்துக்கு புரமோஷன் செய்கிறார் கமல் என்பதை பார்த்தாலே அதன் கன்டென்ட் மீது மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படுவதாக ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர்.

பகத் ஃபாசில் இருக்காரே

பகத் ஃபாசில் இருக்காரே

ஏற்கனவே விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள திரையுலகின் திறமையான நடிகர் பகத் ஃபாசில் நடித்துள்ளார். இந்நிலையில், கமல்ஹாசனே நேரடியாக விக்ரம் புரமோஷனை கேரளாவில் செய்துள்ள நிலையில், படம் வெளியானதும் அங்கேயும் நல்ல கலெக்‌ஷனை எதிர்பார்க்கலாம் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X