twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் கிட்டயே சொல்லுவேன்னு எகிறுனாரு.. இப்போ கன்ஃபெஷன் ரூமில கதறுறாரு பாலா.. அதிரடி வெளியேற்றமா?

    |

    சென்னை: கன்ஃபெஷன் ரூமில் வைத்து பாலாவை கமல் கதறவிடும் அதிரடி புரமோ வெளியாகி உள்ளது.

    இந்த வாரம் பாலாவை பிக் பாஸ் வீட்டில் வறுத்தெடுக்கும் வாரமாகவே மாறிவிட்டது.

    படப்பிடிப்புக்கு முன் கொரோனா டெஸ்ட்... பிரபல இயக்குனருக்கு தொற்று உறுதி.. ஷூட்டிங் தள்ளி வைப்பு! படப்பிடிப்புக்கு முன் கொரோனா டெஸ்ட்... பிரபல இயக்குனருக்கு தொற்று உறுதி.. ஷூட்டிங் தள்ளி வைப்பு!

    ஷிவானி அம்மா வந்து சென்றதில் ஆரம்பித்து, ஞாயிற்றுக் கிழமை எபிசோடு வரைக்கும் பாலா தான் பலி ஆடு போல் தெரிகிறது.

    சரியான நோஸ்கட்

    சரியான நோஸ்கட்

    ஷிவானி அம்மா ஆரியை பார்த்து நல்லா பண்றீங்க என்றும், பாலாவை கொஞ்சமும் மதிக்காமல் ஷிவானியை திட்டி தீர்த்ததும் பாலாவுக்கு இந்த வாரம் சரியான நோஸ்கட்டாக அமைந்தது. ஷிவானி அம்மாவிடம் தைரியமாக பேச தெரியாமல் பம்மி விட்டு, பின்னர் ஆரியிடம் எகிறுவது தான் பாலாவின் தைரியமா என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

    அண்ணனால் வந்த வினை

    அண்ணனால் வந்த வினை

    ஷிவானி அம்மாவை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த பாலாவின் அண்ணன், பாலாவை நல்லாவே கொம்பு சீவி விட்டு சென்று விட்டார். நீ செய்வது சரி என்றும், அதையே தொடர்ந்து பண்ணு, பழைய பாலாவாக மாறி மிரட்டு என அவர் பேசிய பேச்சுக்களை உள்வாங்கியதன் வினை தான் இந்த வாரம் பாலாவுக்கு இப்படி அடி மேல் அடி விழுகிறது.

    கன்ஃபெஷன் ரூமில்

    கன்ஃபெஷன் ரூமில்

    ஜித்தன் ரமேஷை கன்ஃபெஷன் ரூமில் வைத்து வெளியேற்றியதை போலவே பாலாஜி முருகதாஸையும் அதிரடியாக வெளியேற்றுகிறாரா கமல் என்ற பரபரப்பை இன்றைய முதல் புரமோ கிளப்பி இருக்கிறது. கன்ஃபெஷன் ரூமில் பாலாஜி முருகதாஸ் கண்ணீர் விட்டு கதறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    பாலா கதறல்

    பாலா கதறல்

    கமல்ஹாசனிடமே ஆரி டைட்டில் வின் பண்ணா கேட்பேன் என ஓவராக பேசிய நிலையில், நல்லா வச்சு செய்கிறார் கமல் என்பது தெரிகிறது. கன்ஃபெஷன் ரூமில் பாலாவை அழைத்து வைத்து வெளுத்து விடுவதும், தனியாக பாலா நல்லது சொல்ல எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆள் இல்லை என பழைய பாட்டை மீண்டும் பாடுவதுமாக முதல் புரமோ தெறிக்கிறது.

    எவிக்‌ஷன் இருக்குமா

    எவிக்‌ஷன் இருக்குமா

    இந்த வாரம் ஆஜீத் மட்டும் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்கிற தகவல் மட்டுமே இதுவரை கசிந்துள்ளது. சில சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்றும் தகவல் வந்தது. மக்களின் கோரிக்கையை ஏற்று பாலாவை அதிரடியாக வெளியேற்றவே கன்ஃபெஷன் ரூம் ட்ரீட்மென்ட்டா என்பதை காண இன்றைய நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வெயிட்டிங்.

    சீக்ரெட் ரூமில் பாலா

    சீக்ரெட் ரூமில் பாலா

    பாலாஜி முருகதாஸை வெளியேற்றாமல் ஒருவேளை சீக்ரெட் ரூமில் வைத்துக் கொண்டு ஹவுஸ்மேட்கள் செய்வதை வேடிக்கை பார்க்க வைத்து விடுவாரோ கமல் என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்னும் 2 வாரத்துக்குள் பாலா பிக் பாஸ் வீட்டில் மீண்டும் எத்தனை முறை இப்படி அழுது மன்னிப்பு கேட்க போகிறாரோ தெரியவில்லை என ஆரியின் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். நிச்சயம் பாலா மீண்டு வந்து கலக்குவார் என பாலா ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Kamal Haasan put Balaji Murugadoss into confession room and Bala cries in confession room. Will Balaji Murugadoss get evict or put in secret room not showed in surprise first promo.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X