பழிவாங்க தான் அப்படி பண்ணீங்களா? ராஜு தலையில் தண்ணி ஊற்றிய விவகாரம்.. கேள்வி எழுப்பிய கமல்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய 3வது புரமோ ராஜு ரசிகர்களை குளிர்விக்கும் விதமாக உள்ளது.
ராஜு ஜெயமோகனை வீக்கான போட்டியாளர் லிஸ்ட்டிலேயே சேர்த்து அவரது தலையில் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ஐஸ் தண்ணியை ஊற்றிய நிகழ்வை இன்றைய எபிசோடில் கமல் கையில் எடுத்திருப்பதை 3வது புரமோவில் காட்டி உள்ளனர்.
பழிவாங்கும் நடவடிக்கையாகவே ராஜுவை பல ஹவுஸ்மேட்கள் தேர்வு செய்தார்களா? என்கிற கேள்வியையும் கமல் எழுப்பி உள்ளார்.

ராஜு தான் டார்கெட்
பிக் பாஸ் வீட்டில் இருந்து அடுத்ததாக ராஜு ஜெயமோகனை வெளியேற்றி விட வேண்டும் என ஏகப்பட்ட ஹவுஸ்மேட்கள் கங்கணம் கட்டிக் கொண்டு அவருக்கு எதிராக திரும்பி உள்ளதை தான் இந்த வாரம் பிக் பாஸ் ஷோவாக காட்டினர் என ராஜுவின் ஆர்மியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இவங்களாம் பேசுனாங்களா
முகத்துக்கு நேராக ராஜு ஜெயமோகன் எந்தவொரு கருத்தையும் எடுத்து வைப்பதில்லை என்றும் இமான் அண்ணாச்சியும் சொல்வதில்லை என்றும் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் காழ்ப்புணர்ச்சி காரணமாக ராஜுவையும் இமான் அண்ணாச்சியையும் தேர்வு செய்தார்கள் என்றும் மதுமிதா, அபிநய், பிரியங்கா, ஐக்கி பெர்ரி உள்ளிட்ட பலர் முகத்துக்கு நேராக எப்போ பேசி சண்டை போட்டார்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தண்ணி ஊற்றும் தண்டனை
பழிவாங்கும் நடவடிக்கையாகவே ராஜு ஜெயமோகனுக்கு மோசமான விருதுகளும் அந்த தண்ணி ஊற்றும் தண்டனையும் கொடுக்கப்பட்டது என்றும் ராஜு ஜெயமோகன் இதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்பார் என்றும் அவரது ரசிகர்கள் ஓட்டுகளை வாரி இரைத்து அவருக்கு மிகப்பெரிய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

பழிவாங்க பண்ணீங்களா
பாவனி, இசைவாணி மற்றும் தாமரை செல்வி மூவரும் தான் ராஜு மீது இப்போதைக்கு இந்த வீட்டில் கொலை காண்டுல இருக்காங்க என்பதை இந்த புரமோ தெளிவாக காட்டி உள்ளது. அபிநய்யை காட்டவில்லை அவரை புரமோவிலும் கண்டு கொள்ளவில்லை. தாமரையின் விளக்கத்தை கேட்டதும் அப்போ பழிவாங்கத்தான் இப்படி பண்ணீங்களா? என கேட்டு வெளுத்து வாங்கி விட்டார்.

மக்கள் ஓட்டு
நீங்க உள்ளே இப்படி நினைக்கிறீங்க.. ஆனால், வெளியே மக்கள் என்ன நினைக்கிறாங்க தெரியுமா? என ஹவுஸ்மேட்ஸை பார்த்து கேட்ட கமல் ராஜு ஜெயமோகன் காப்பாற்றப்பட்டுள்ளார் என சொல்ல ஒட்டுமொத்த அரங்கமே கைதட்டி ஆரவாரம் செய்தது. பின்னணியில் ஒலித்த ராஜு பாய் பாடல் வேற லெவல். எடிட்டரும் ஃபேன் ஆகிட்டாரு போல!


Click it and Unblock the Notifications











