twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த மூன்று குரங்குகளாக அவை எப்போதும் இருக்காது.. சினிமாடோகிராஃப் சட்டத்திற்கு எதிராக கமல் காட்டம்

    |

    சென்னை: சினிமா, ஊடகம் மற்றும் கல்வி எப்போதுமே இந்தியாவின் மூன்று குரங்குகளாக இருக்காது என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் எச்சரிக்கை ட்வீட் போட்டுள்ளார்.

    ஒளிப்பதிவு சட்டம் 1952-ஐ மறுசீரமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொள்ளப் போகிறது.

    இதற்கு தனது கடும் எதிர்ப்பை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சட்டத்திருத்தை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    கண்ணதாசனும், எம்எஸ்வி.,யும் இந்தியாவின் பொக்கிஷங்கள்... புகழ்ந்த கமல் கண்ணதாசனும், எம்எஸ்வி.,யும் இந்தியாவின் பொக்கிஷங்கள்... புகழ்ந்த கமல்

    சினிமாவை கட்டுப்படுத்த

    சினிமாவை கட்டுப்படுத்த

    இந்தியா முழுவதும் உள்ள சினிமா துறையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு Cinematograph act 1952ல் திருத்தம் கொண்டு வரும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது. Cimematograph act 2021 - ஐ அமல்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    மூன்று குரங்குகள் அல்ல

    மூன்று குரங்குகள் அல்ல

    கண், வாய், காதுகளை அடைத்துக் கொண்டு இருக்கும் இந்தியாவின் மூன்று குரங்கு சின்னங்களாக ஒரு போதும் சினிமா, மீடியா மற்றும் கல்வி இருக்காது என்றும், அதன் சுதந்திரத்தை நசுக்கப் பார்த்தால் அது மிகப்பெரிய பாதிப்பையே உண்டாக்கும் என்றும் தனது கண்டனத்தை கமல்ஹாசன் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.

    குரல் கொடுங்கள்

    குரல் கொடுங்கள்

    வரும் ஜூலை 2ம் தேதிக்குள் இது தொடர்பான கருத்துக்களை பொது மக்கள் தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக அனைவரும் உங்கள் எதிர்ப்பு குரலை பதிவு செய்யுங்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    கருத்து சுதந்திரம்

    கருத்து சுதந்திரம்

    இந்த சட்டத் திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி விடும் என நடிகர் கமல்ஹாசன் தனது கண்டனத்தை வைத்துள்ளார். இந்தியளவில் ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த சட்டத்திற்கு எதிராக தங்களின் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

    என்ன பாதிப்பு

    என்ன பாதிப்பு

    ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டால் மத்திய அரசு அரசியல் ரீதியாக சினிமா துறையை பயன்படுத்திக் கொள்ளும் என்றும், தங்களுக்கு எதிரான கருத்துக்களை யாருமே வெளிப்படுத்த முடியாதபடி நசுக்கி விடும் என்றும், சட்டத்தை மீறினால் கைது நடவடிக்கை, சிறை தண்டனை உள்ளிட்டவைகள் கூட வழங்கப்படலாம் என சமூக வலைதளத்தில் சினிமா துறையை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Actor and Director Kamal Haasan raises his voice against Cinematograph act 2021 which was imposed by Central Government.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X