ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படம்?.. கிட்டத்தட்ட உறுதியாகிடுச்சாம்.. கேமரா மேன் யார் தெரியுமா?
சென்னை: கமல்ஹாசன் கடைசியாக நடித்த தக் லைஃப், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தையும் முடித்துவிட்டு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தின் கேமரா மேன் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் அரசியலையும், சினிமாவையும் ஒரே நேரத்தில் ஹேண்டில் செய்து வருகிறார். விரைவில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை கூட்டணி கட்சியான திமுகவுடன் அவர் தொடங்கிவிட்டதாக தெரிகிறது. மறுபக்கம் நடிப்பு, தயாரிப்பு எனவும் பிஸியாக இருக்கிறார். தனது நண்பர் ரஜினிகாந்த்தை வைத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தலைவர் 173 படத்தை தயாரிக்கிறார்.
நடிப்பு லைன் அப்: தலைவர் 173 மட்டுமின்றி இன்னும் சில படங்களையும் அவர் தயாரிக்கவிருப்பதாகவும்; அடுத்தடுத்து அதுகுறித்த அறிவிப்புகள் வரலாம் என்றும் கூறப்படுகிறது. அவரது நடிப்பை பொறுத்தவரை கடைசியாக தக் லைஃப், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இரண்டு படங்களின் இயக்குநர்களும் லெஜண்ட்ரி இயக்குநர்கள் என்று பெயர் எடுத்தவர்கள். எனவே பெரிய எதிர்பார்ப்பை அப்படங்கள் சம்பாதித்திருந்தன. ஆனால் இரண்டுமே மோசமான தோல்வியையும், ட்ரோல்களையும் சந்தித்தன.

இளம் இயக்குநர்களுடன்: இரண்டு பெரிய இயக்குநர்களும் பெரிய சொதப்பலை செய்துவிட்டதால் இனிமேல் இளம் இயக்குநர்களுடன் மட்டும்தான் பணியாற்றுவதாக அவர் முடிவெடுத்துவிட்டதாக தெரிகிறது. அந்தவகையில் சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன் பூஜை போடப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டாலும் ஷூட்டிங் இன்னும் தொடங்காமல் இருக்கிறது. சமீபத்தில்தான் கதை தொடர்பான அத்தனை பணிகளும் முடிக்கப்பட்டதாகவும்; இன்னும் சில மாதங்களில் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாகவும் கோலிவுட் பட்சிகள் சொல்கின்றன.
நெல்சன் திலீப்குமாருடன்: இந்தப் படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த்துடன் இணைந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடியிருக்கிறது. அதுமட்டுமின்றி தாங்கள் இணையும் படம் ஆக்ஷன் படமாக இல்லாமல் காமெடி படமாக அமைய வேண்டும் என்று ரஜினி, கமல் விரும்புவதாகவும் எனவே நெல்சன் திலீப்குமார் டார்க் காமெடி ஜானரில் கிங் என்பதால் அவரை இயக்குநராக டிக் அடித்துவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
கேமரா மேன் ராஜீவ் மேனன்: இந்நிலையில் இந்தப் படத்தின் கேமரா மேன் பற்றிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. அதன்படி இதில் ஒளிப்பதிவாளராக தேசிய அளவில் கவனம் ஈர்த்த ராஜீவ் மேனன் ஒப்பந்தமாகியிருக்கிறாராம். ஏற்கனவே தமிழில் அவர் பம்பாய் உள்ளிட்ட பல படங்களுக்கு கேமரா செய்திருக்கிறார். அவரது வொர்க் எப்போதுமே ரசிக்கும்படி இருக்கும். எனவே கமல், ரஜினியுடன் அவர் இணையவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் சினிமா ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











