வீதியை மீறுறாங்க.. விளையாடாம சும்மா உட்காந்துக்குறாங்க.. சொல்ற அளவுக்கு சுளுக்கு எடுப்பாரா கமல்?

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட்டின் 2வது வாரத்துக்கான கமல் புரமோ வெளியாகி உள்ளது.

Recommended Video

Bigg Boss Ultimate Bala Suruthi மத்தியில் ஏற்பட்ட சண்டை | முன்னாடி Seasonல நீ ஒழுங்கா முற்றிய மோதல்?

இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீடு போலீஸ் திருடன் டாஸ்க்கில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தது. எந்த டாஸ்க் கொடுத்தாலும் விதியை மீறி விளையாடும் நபர்களும், சும்மா மிக்சர் தின்னும் நபர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

அதே பிரச்சனை இந்த வாரமும் பிக் பாஸ் வீட்டில் தலை தூக்க சாட்டையை சுழற்ற கமல் தயாராகி உள்ள முதல் புரமோ தெறிக்கிறது.

2வது வாரம்

2வது வாரம்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வெற்றிகரமாக இரு வாரங்களை கடந்து விட்டது. முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே வீட்டில் இருந்து சுஜா வெளியேறி உள்ளார் என்கிற தகவலும் கசிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

மிரட்டும் கமல்

மிரட்டும் கமல்

ஒரு பக்கம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விக்ரம் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் கமல் சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் பணிகள், தேர்தலை எதிர்நோக்கி ஆயத்தமாவது என ஏகப்பட்ட பணிகளுக்கு இடையே சனிக்கிழமை மட்டும் பிக் பாஸ் ஷூட்டிங்கிற்கு வந்து நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

விதிமீறல்னாலே பாலாதானே

விதிமீறல்னாலே பாலாதானே

பிக் பாஸ் போடும் ரூல்ஸ்களை மீறி விளையாடும் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் கடந்த 4வது சீசனில் ஏகப்பட்ட விதிமீறல்களுடன் ரன்னர் அப் ஆனார். இந்நிலையில், அதே ஸ்டைலை இந்த பிக் பாஸ் அல்டிமேட்டிலும் தொடர்ந்து செய்து வருகிறார். கமல் சொல்லும் விதிமீறல் பிரச்சனை கண்டிப்பாக அவருக்கானது தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், கருப்பு கலர் உடையை அணிந்து கொண்டு காலா கெட்டப்பில் பாலா வந்துள்ளதையும் கண்டு பிடித்துவிட்டனர்.

விளையாட மறுக்கும் வனிதா

விளையாட மறுக்கும் வனிதா

பாலாஜி முருகதாஸ் விதியை மீறி விளையாடி வரும் நிலையில், தனக்கு பிடிக்காத விளையாட்டை விளையாட மாட்டேன் என இன்னொரு ஸ்ட்ராட்டஜியுடன் பிக் பாஸ் கேமை விளையாடி வருகிறார் வனிதா விஜயகுமார். அவருக்கும் குட்டு வைக்கும் விதமாகவே தற்போது வெளியாகி உள்ள முதல் புரமோவில் கமல் சாட்டையை சுழற்றி உள்ளார்.

சுளுக்கு எடுப்பாரா கமல்

சுளுக்கு எடுப்பாரா கமல்

சும்மா புரமோவுக்கு மட்டும் தான் இப்படி பேசுவார். ஆனால், நிகழ்ச்சியில் சுளுக்கு எடுக்கமாட்டார் என நெட்டிசன்கள் முதல் புரமோவை பார்த்து கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் அல்டிமேட் முதல் வாரத்திலேயே கமல்ஹாசனின் தொகுப்பாளர் தொனி வித்தியாசமாக மிரட்டிய நிலையில், இரண்டாவது வாரத்திலும் அது தொடரும் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X