பாவனை என பில்டப் கொடுத்த கமல்.. 'எந்த இது சார்' என சிரித்து சொதப்பிய பாவனி.. அப்செட்டான ஆர்மி!

சென்னை; தனக்கு பிக் பாஸ் வீட்டில் நேர்ந்த கொடுமைகளை சொல்லி பாவனி வீக்கெண்ட் எபிசோடில் வெளுத்து வாங்குவார் என பார்த்தால் "எந்த இது சார்" என கேட்டு பாவனி ஆர்மியினரை அப்செட் ஆக்கி உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் லவ் டிராக் இல்லை என்பதற்காக பாவனியை வைத்து பண்ண முயற்சிகள் வேறு ஒரு பூகம்பத்தை கிளப்பியது.

ராஜுவை பார்த்து அந்த கேள்வி கேட்ட பாவனி உடனடியாக அவரை கட்டி அணைத்து சமாதானம் ஆனது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.

பாவனி பஞ்சாயத்து

பாவனி பஞ்சாயத்து

பிரியங்கா தாமரை பஞ்சாயத்தை கமல் பண்ணுவதை இரண்டாவது புரமோவில் காட்டிய நிலையில், மூன்றாவது புரமோவில் பாவனி பஞ்சாயத்தை கையில் எடுத்து பேசி உள்ளார் கமல். நான் பேசணும் என்னை எப்ப கூப்பிடுவாங்க அப்டிங்கிற ஒரு பாவனையுடன் ஒருத்தர் உட்கார்ந்து இருந்தாங்க என கமல் கொடுத்த பில்டப் ஹவுஸ்மேட்ஸ் யாருக்கும் புரியாமல் போவது தான் செம காமெடி.

உலக மகா நடிப்பு

உலக மகா நடிப்பு

பாவனை என கமல் க்ளூ கொடுத்தும் ஹவுஸ்மேட்கள் அனைவரும் யாரை பற்றி பேசுகிறார் என தெரியாவதர்கள் போல குழம்புவதை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா உலக மகா நடிப்பு டா சாமி.. தாமரை மட்டும் அல்ல அனைவருமே நாடகக்காரர்கள் தான் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பாவனி அதுக்குமேல

பாவனி அதுக்குமேல

கடைசியாக கமல் மீண்டும் பாவனை என சொல்லியும் புரியவில்லையா? பாவனி பற்றிய பஞ்சாயத்து தான் எடுத்துக் கூற இந்த வாரம் தனக்கு ஒன்றுமே நடக்காதது போல "எந்த இது சார்" என பாவனி கமல் சாரை பார்த்து கேட்டு அவரையே குழப்பி விடும் கலக்கல் புரமோ வெளியாகி உள்ளது.

டைல்யூட் பண்ண

டைல்யூட் பண்ண

ஒரு பெண்ணின் பர்சனல் மேட்டர் பற்றி ராஜு, சிபி உள்ளிட்டவர்கள் பேசியதை கமல் கண்டிக்க வேண்டும் என குரல் கொடுத்து வந்த பாவனி ஆர்மியினருக்கு பல்பு கொடுக்கும் விதமாக பாவனி சமாதானம் ஆனதும் தற்போது ஒன்றுமே நடக்காதது போல பாவனி பேசுவதையும் பார்த்தால் அந்த மேட்டரை டைல்யூட் பண்ண பிக் பாஸ் குழு போட்ட திட்டமாகவே தெரிவதாக நெட்டிசன்கள் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X